ETV Bharat / bharat

நெகிழிக்கு உணவுத் திட்டம் - மலப்புரத்தில் தொடக்கம்!

author img

By

Published : Nov 17, 2019, 5:12 PM IST

திருவனந்தபுரம்: கேரளாவில் மலப்புரம் நகரில் 'நெகிழிக்கு உணவு' திட்டத்தை மலப்புரம் மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர் உபாய்துலா ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

Plastic Meal

கேரளாவின் மலப்புரம் நகரில் இயற்கைக்குக் குந்தகம் விளைவிக்காத வண்ணம் நெகிழிக் குப்பகளை அப்புறப்படுத்த மலப்புரம் மாநகராட்சி
பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 'நெகிழிக்கு உணவு' என்ற புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. நெகிழி குப்பைகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் நபர்களுக்கு உணவளிப்பதே இந்த திட்டத்தின் சாரம்சமாகும்.

இந்தத் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஜாஃபர் மாலிக், சட்டப்பேரவை உறுப்பினர் உபாய்துலா ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

நெகிழிக்கு உணவு திட்ட தொடக்க விழா

தொடர்ந்து, ஆட்சியர் ஜாஃபர் மாலிக் மாநகராட்சிக்கு நெகிழி குப்பைகள் அடங்கிய மூட்டை ஒன்றை வழங்கினார். அதற்கு மாநகராட்சி ஊழியர்கள் ஆட்சியரிடம் உணவை வழங்கினர்.

இதுகுறித்து ஆட்சியர் ஜாஃபர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுபோன்ற திட்டம் கேரளாவில் செயல்படுத்தப்படுவது இதுவே முதன் முறையாகும் என்றார்.

முன்னதாக, நகர் கவுன்சிலர்கள், தேசிய சமூகப் பணித் திட்ட ஆர்வலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஒன்றாகச் சேர்ந்து மலப்புரம் நகர் பகுதியிலிருந்து கோட்டபாடி வரை பேரணியாகச் சென்று நெகிழி குப்பைகள் அள்ளும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 'வரும் மார்ச் மாதத்திற்குள் தனியார் கையில் இருபெரும் பொதுத்துறை நிறுவனங்கள்' - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

Intro:Body:

'A Plastic Worth A Plate Of Meal' Campaign In Malappuram; First In Kerala



Malappuram: "Give plastic, get food". Those plastic garbages now worth for a meal as plastic eradication campaign tieup with hunger- free city. The initiative was inaugurated by MLA P. Ubaidulla and district collector Jaffer Malik gave a packet of plastic waste to the the organizers, was presented with a plate of meal then. 

"The idea is very first in Kerala which promote a service together with an awareness campaign," said Jaffer Malik. The innovative campaign is organised by Malappuram Corporation which feeds the hungry stomachs in the city, just prizing the used plastic thrown around the city. Ahead of the inauguration, city councilors, employees and NSS volunteers held a rally from Malappuram town to Kottapadi to collect the garbage as part of the campaign.

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.