ETV Bharat / bharat

புதுச்சேரி கடற்கரையில் பிளாஸ்டிக்கிற்கு தடை

author img

By

Published : Nov 6, 2019, 10:09 AM IST

புதுச்சேரி: சின்ன வீராம்பட்டினம் கடற்கரை சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளதால் பிளாஸ்டிக் பயன்படுத்தவும், குறிப்பிட்ட பகுதியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

International recognition for Veerampattinam beach, புதுச்சேரி கடற்கரையில் பிளாஸ்டிக் பயன்படுத்தவும், குறிப்பிட்ட பகுதியில் குளிக்க தடை

புதுச்சேரியில் சின்ன வீராம்பட்டினம் முதல் நோனங்குப்பம் வரை உள்ள பேரடைஸ் கடற்கரை பகுதிதான் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் கவரப்பட்டு வருகின்றது. இங்கு நீண்ட வெண்மணல் கொண்ட கடற்பரப்பில் காலாற நடக்கவும், விளையாடி மகிழவும் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக விரும்புகின்றனர்.

இந்நிலையில் சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாதுகாப்பு, சுத்தமான கடற்கரையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

International recognition for Veerampattinam beach, புதுச்சேரி கடற்கரையில் பிளாஸ்டிக் பயன்படுத்தவும், குறிப்பிட்ட பகுதியில் குளிக்க தடை

இதையடுத்து மூன்று சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இக்கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கும், குறிப்பிட்ட பகுதியில் குளிக்கவும் மாநில அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருண் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'உலக அளவில் இந்தியாவில் 21 கடற்கரைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதில் புதுச்சேரியில் சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள கடற்கரையும் அதில் வந்துள்ளதாக கூறினார்.

மேலும் பேசிய அவர், இக்கடற்கரையில் குப்பைகள் கொட்டக் கூடாது, பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு கருதி 144 தடை போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை தூய்மைப்படுத்திய மாணவர்கள்!

Intro:புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடற்கரை சர்வதேச அங்கீகாரம் பெற்று உள்ளதால் அக் கடற்கரையில் பிளாஸ்டிக் பயன்படுத்தவும்.குறிப்பிட்ட பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
Body:புதுச்சேரி :


புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடற்கரை சர்வதேச அங்கீகாரம் பெற்று உள்ளதால் அக் கடற்கரையில் பிளாஸ்டிக் பயன்படுத்தவும்.குறிப்பிட்ட பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மனதை கொள்ளைகொள்ளும் கடற்கரை என்றால் சின்ன வீராம்பட்டினம் முதல் நோனங்குப்பம் வரை உள்ள பேரடைஸ் பீச் வரையிலான பகுதிதான் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் கவரப்பட்டு வருகின்றன இங்கு நீண்ட வெண்மணல் கொண்ட கடற்பரப்பில் காலாற நடகக்கவும் விளையாடுடி மகிழவும் சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு படை எடுக்கத் துவங்கி உள்ளனர்

இந்நிலையில் சின்ன வீராம்பட்டினம் பீச் கடற்கரைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது பாதுகாப்பு மற்றும் சுத்தமான கடற்கரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது

இதையடுத்து மூன்று சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது அதன்படி இனிமேல் சுற்றுலா பயணிகள் பார்வையாளர்கள் இந்த பகுதிக்கு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது வீராம்பட்டினம் தெற்கு பகுதியிலிருந்து சுண்ணாம்பு ஆறு பாரடைஸ் பீச் பகுதிக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவோ. விற்பனை செய்யவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருண் செய்தியாளர்களிடம் பேசியபோது

உலக அளவில் இந்தியாவில் 21 கடற்கரைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது அதில் புதுச்சேரியில் சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்

இக் கடற்கரையில் குப்பை கொட்ட கூடாது குறிப்பிட்ட பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் இங்கு 144 போடப்பட்டுள்ளது என்றும் அப்பகுதி பாதுகாப்பு மற்றும் சுத்தமான கடற்கரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்


Conclusion:புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடற்கரை சர்வதேச அங்கீகாரம் பெற்று உள்ளதால் அக் கடற்கரையில் பிளாஸ்டிக் பயன்படுத்தவும்.குறிப்பிட்ட பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.