ETV Bharat / bharat

'காஷ்மீரில் குருதி ஓடுவதை கட்டுப்படுத்த இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்'

author img

By

Published : Nov 14, 2020, 8:38 PM IST

Hurriyat Conference   Mirwaiz Umar Farooq
'காஷ்மீரில் ரத்தக்களரியை கட்டுப்படுத்த இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்'

காஷ்மீரில் குருதி ஓடுவதை கட்டுப்படுத்த இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என மிதவாத ஹரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று (நவம்பர் 14) நடைபெற்ற மிதவாத ஹரியத் மாநாட்டில், இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்றும் கட்டுப்பாட்டு பகுதியில் குருதி ஓடுவதை கட்டுப்படுத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று (நவம்பர் 13) இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் சிலர் உயிரிழந்தனர்.

இதையொட்டி, மிதவாத ஹரியத் மாநாட்டு அமைப்பின் தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக் விடுத்துள்ள அறிக்கையில், காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்றும் கட்டுப்பாட்டு பகுதியில் ஏற்படும் ரத்தக்களரியை கட்டுப்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

மேலும், அந்த அறிக்கையில், கட்டுப்பாட்டு எல்லையில் நீடித்த மோதலில் சிக்கியுள்ள இருநாட்டு ராணுவ வீரர்கள், அப்பாவி காஷ்மீரிகள் உயிரிழப்பது மிகுந்த வருத்தமளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று நடைபெற்ற தாக்குதலின்போது பொதுமக்கள் ஆறு பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: எல்லையில் தாக்குதல்: 3 இந்தியர்கள், 8 பாகிஸ்தானிகள் பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.