ETV Bharat / bharat

பாஜகவின் பிகார் தேர்தல் வாக்குறுதியை விமர்சித்த உத்தவ் தாக்ரே!

author img

By

Published : Oct 26, 2020, 6:30 AM IST

Updated : Oct 26, 2020, 6:39 AM IST

மும்பை: பிகாரில் இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதியளித்த பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ள மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வங்கதேசம் அல்லது கஜகஸ்தானைச் சேர்ந்தவர்களாக அந்தக் கட்சி கருதுகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தவ் தாக்ரே!
உத்தவ் தாக்ரே!

கரோனா தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ள காரணத்தால், மும்பை, தாதரிலுள்ள சாவர்கர் மண்டபத்தில் வைத்து நடைபெற்ற சிவசேனா கட்சியின் தசரா பேரணியில் பேசிய உத்தவ் தாக்கரே, பிகாரில் இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ள பாஜக மற்ற மாநில மக்கள் வங்கதேசம் அல்லது கஜகஸ்தானைச் சேர்ந்தவர்களாக அந்தக் கட்சி கருதுகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மத்தியில் ஆட்சியிலிருக்கும் நீங்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும் என்றும் கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து, சாதி, மதம் ஆகியவற்றில் மக்களை பிளவுபடுத்த வேண்டாம் என்று பாஜகவை தாக்கரே எச்சரித்தார்.

மறைமுகமாக நடிகை கங்கனா ரணாவத்தை தாக்கிப் பேசிய அவர், சிலர் ரொட்டி, வெண்ணைக்காக மும்பைக்கு வந்து நகரத்தை சீரழித்து விட்டு, இதை பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என விமர்சிக்கின்றனர் என்றார்.


நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் தனது மகன் ஆதித்யா தாக்கரே மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மவுனம் கலைத்த தாக்கரே, பிகாரின் மகனுக்காக அழுகிறவர்கள் மஹாராஷ்டிராவின் மகனின் நடத்தையை குறைகூறுகிறார்கள் என்றார்.

இதையும் படிங்க : ரிசர்வ் வங்கி ஆளுநரையும் விட்டுவைக்காத கரோனா!

Last Updated : Oct 26, 2020, 6:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.