ETV Bharat / bharat

ரிசர்வ் வங்கி ஆளுநரையும் விட்டுவைக்காத கரோனா!

author img

By

Published : Oct 25, 2020, 9:00 PM IST

'கரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நோயின் அறிகுறிகள் எதுவும் பெரிதளவில் இல்லாததால் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும், என் இடத்திலிருந்தே பணிகளைத் தொடர உள்ளளேன்' என ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

RBI Governor Shaktikanta Das
RBI Governor Shaktikanta Das

டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் ட்விட்டர் பதிவில், 'கரோனா பரிசோதனையில் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நோயின் அறிகுறிகள் எதுவும் பெரிதளவில் இல்லாததால் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும், இங்கிருந்தே என் பணிகளைத் தொடர உள்ளேன்' எனத் தெரிவித்திருக்கிறார்.

RBI Governor Shaktikanta Das
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ட்வீட்

மேலும், என்னை அண்மை நாட்களில் சந்தித்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும்; சக்திகாந்த தாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார். காணொலி காட்சி, தொலைபேசி மூலம் தொடர்ந்து இணைப்பில் இருப்போம் என்றும் நம்பிக்கையூட்டியுள்ளார், சக்திகாந்த தாஸ்.

இதையும் படிங்க: குடிநீர் குழாய் இணைப்புப் பெறுவதில் இவ்வளவு தாமதமா? தடையா? - சிறப்புக்கட்டுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.