ETV Bharat / bharat

'இது ஓவைசியின் டிஸ்னிலேண்ட், ட்ரீம்லேண்ட் அல்ல'- தேஜஸ்வி சூர்யா

author img

By

Published : Nov 25, 2020, 10:24 AM IST

ஓவைசியால் பாதுகாக்கப்படும் ஒவ்வொரு ரோகிங்யாக்களும் இங்கிருந்து அகற்றப்படுவார்கள் என்று பெங்களூரு (தெற்கு) பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கூறினார். மேலும், இது ஓவைசியின் டிஸ்னிலேண்ட், ட்ரீம்லேண்ட் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

Rohingya protected by Owaisi will be removed Tejasvi Surya attacks Owaisi Tejasvi Surya on rohingyas Tejasvi Surya's GHMC campaign AIMIM chief தேஜஸ்வி சூர்யா ஓவைசியின் டிஸ்னிலேண்ட், ட்ரீம்லேண்ட் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் தெலங்கானா ஓவைசி பாஜக
Rohingya protected by Owaisi will be removed Tejasvi Surya attacks Owaisi Tejasvi Surya on rohingyas Tejasvi Surya's GHMC campaign AIMIM chief தேஜஸ்வி சூர்யா ஓவைசியின் டிஸ்னிலேண்ட், ட்ரீம்லேண்ட் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் தெலங்கானா ஓவைசி பாஜக

ஹைதராபாத் (தெலங்கானா): ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பரப்புரை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஓவைசி பாதுகாக்கும் ரோகிங்யாக்களை, நாங்கள் தூக்கி எறிவோம்” என்று பெங்களூரு (தெற்கு) எம்.பி. தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.

தேஜஸ்வி சூர்யா மேலும் கூறுகையில், “சட்டவிரோதமாக நாட்டில் வாழும் ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் அகற்றப்படுவார்கள். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இது ஓவைசியின் டிஸ்னிலேண்ட், ட்ரீம்லேண்ட் கிடையாது. ரோகிங்யாக்களை அவர் பாதுகாக்க நினைக்கிறார்கள். நாங்கள் அவர்களை அகற்றுவோம்” என்றார்.

ஹைதராபாத் நகரை பாக்யா நகர் என்று மாற்ற வேண்டும் என்பது குறித்து பேசுகையில், “இது பெயரை மாற்றுவது அல்ல, மக்கள் தொகை சார்ந்தது. பழைய ஹைதராபாத் நகரில் இந்து மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறுகின்றனர். அங்கு என்ன நடக்கிறது? பழைய குடியிருப்பு பகுதிகளிலிருந்து இந்துக்கள் வெளியேற ஏன் நிர்பந்திக்கப்படுகிறார்கள்? இந்த அரசியலுக்கு யார் பொறுப்பு? ஓவைசியா?” என்றார்.

தெலங்கானா மாநிலத்துக்கு உரிய நிதி வழங்க மத்திய பாஜக அரசு மறுக்கிறதே என்ற கேள்விக்கு, “தெலங்கானா மாநிலத்துக்கு ஏற்கனவே போதுமான நிதி வழங்கப்பட்டுள்ளது. முதலில் எந்தத் திட்டத்துக்கு எவ்வளவு நிதி செலவளிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை தெலங்கானா அரசு வழங்கட்டும். இந்த பணத்தால் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்வுக்கு நெருக்கமாக உள்ள ஒப்பந்ததாரர்கள் பயன்பெறுகிறார்கள். இதனை மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

முன்னதாக மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார், “ஹைதராபாத் பழைய நகரத்தின் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்படும்” என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ஓவைசி, “தேர்தலில் வெற்றி பெற்றால், ஹைதராபாத்தின் பழைய நகரில் ரோகிங்யா, பாகிஸ்தானியர்கள் மீது துல்லிய (சர்ஜிக்கல்) தாக்குதல் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் கூறுகிறார்.

நான் பாஜகவிடம் ஒன்றை கேட்கிறேன். நீங்கள் யாரின் மீது துல்லிய தாக்குதல் நடத்த உள்ளீர்கள்? இங்கு வசிப்பவர்கள் இந்திய குடிமகன்கள். நான் உங்களுக்கு 24 மணி நேரம் தருகிறேன், இங்கு எத்தனை பாகிஸ்தானிகள், ரோகிங்யாக்கள் வாழ்கின்றனர் என்று நீங்கள் சொல்ல வேண்டும்” என்றார்.

சஞ்சய் குமார் தனது அறிக்கையில், “தெலங்கானா மாநகராட்சி தேர்தலில் ஆளுங்கட்சியும், ஓவைசியும் கூட்டு வைத்துள்ளனர். “சட்டவிரோத ரோகிங்யாக்கள், பாகிஸ்தானியர்கள், ஆப்கானிஸ்தானிகளுடன் கைகோர்த்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

ஹைதராபாத் மாநகராட்சிக்கு தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடக்கிறது. முடிவுகள் 4ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: முகம்மது அலி ஜின்னா போல் செயல்படுகிறார் ஓவைசி- தேஜஸ்வி சூர்யா தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.