ETV Bharat / bharat

'ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்' - நாராயணசாமி

author img

By

Published : Jan 21, 2020, 2:44 PM IST

புதுச்சேரி: மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்துநிறுத்த வேண்டும், இல்லையென்றால் நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என மத்திய அரசுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சவால்விடுத்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி  ஹைட்ரோ கார்பன் திட்டம் புதுச்சேரி  cm narayanasamy press meet  hydrocarbon project
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு புதுவை முதலமைச்சர் எதிர்ப்பு

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில் உள்ள அவரது அறையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் எரிவாயு கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனம் முயற்சி செய்கின்றது.

புதுச்சேரி பாகூர், காரைக்கால் பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாகச் செய்துவருகின்றனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படும். மேலும், இதில், ரசாயனக் கலவை அதிகமாகப் பயன்படுத்தப்படும். இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு நீரின் மட்டமும் குறைய வாய்ப்புள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் எதிர்ப்பு

மாநில அரசின் அனுமதி தேவையில்லை. நேரடியாக வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்தைப் புதுச்சேரியில் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும். மத்திய அரசு சர்வாதிகாரப்போக்கை கடைப்பிடிக்கிறது.

வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் இந்தத் திட்டத்தை தடுத்துநிறுத்துவோம். இதற்காக எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயாராகவுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: பெரியார் குறித்து அவதூறு பேச்சு - ரஜினி வீடு முற்றுகை

Intro:வேதாந்த நிறுவனத்திற்கு கொடுத்து அனுமதியை திரும்பப் பெற வேண்டும் இல்லையென்றால் நாங்கள் எந்த விளைவுகளையும் சந்திக்க தயார் என முதல்வர் நாராயணசாமி மோடிக்கு சவால் விடுத்தார்


Body:புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை உள்ள அவரது அறையில் என்று செய்தியாளர் சந்தித்தார் அப்போது பேசிய அவர்
புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எரிவாயு கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனம் முயற்சிக்கிறது
புதுச்சேரி பாகூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மக்கள் அதிகம் வசிக்கின்றனர் விவசாயமும் இங்கு உள்ளது நிலத்தடிநீர் இதற்காக அதிக அளவில் உறிஞ்சப்படுகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ரசாயன கலவையை அதிக பயன் படுத்தப்படும் இதனால் நிலத்தடி நீர் கீழ் மட்டம் வரை செல்ல வாய்ப்புள்ளது மற்ற நிலப்பகுதிகளில் அனைத்தும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவித்த முதல்வர் நாராயணசாமி

மாநில அரசின் அனுமதி தேவையில்லை நேரடியாக வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது இது மாநில அரசின் உரிமையை பறிப்பதாகும் சர்வாதிகாரப் போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பதாக முதல் நாராயணசாமி ஆவேசமாக தெரிவித்தார் காரைக்காலில் அதிக அளவு பாதிப்பு உள்ளது ஆகவே பிரதமர் மோடிக்கும் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் உடனடியாக திட்டத்தை நிறுத்த வேண்டும் இல்லையெனில் நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என்றும் அவர் கூறினார்

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் .வட மாநிலங்களில் மட்டும் இந்த திட்டத்தை கொண்டு வரவில்லை ஏன் கேள்வி எழுப்பி அவர் வேதாந்த நிறுவனத்திற்கு கொடுத்து அனுமதியை திரும்பப் பெற வேண்டும் இல்லையென்றால் நாங்கள் எந்த விளைவுகளையும் சந்திக்க தயார் என முதல்வர் நாராயணசாமி மோடிக்கு சவால் விடுத்தார்


Conclusion:வேதாந்த நிறுவனத்திற்கு கொடுத்து அனுமதியை திரும்பப் பெற வேண்டும் இல்லையென்றால் நாங்கள் எந்த விளைவுகளையும் சந்திக்க தயார் என முதல்வர் நாராயணசாமி மோடிக்கு சவால் விடுத்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.