ETV Bharat / bharat

'சென்னை முன்னேற ஆட்டோமொபைல் துறைக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும்' - விக்ரம் விஜயராகவன்

author img

By

Published : Jan 31, 2020, 12:33 PM IST

Updated : Jan 31, 2020, 1:04 PM IST

சென்னை: மத்திய நிதி அறிக்கை ஆட்டோமொபைல் துறைக்கு சிறப்புச் சலுகைகள் கொடுத்தால்தான் சென்னை முன்னேற முடியும் என ஃபிக்கியின் தமிழ்நாடு தலைவர் விக்ரம் விஜயராகவன் ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Vikram Vijayaraghavan, விக்ரம் விஜயராகவன்
Vikram Vijayaraghavan

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது நிதித் துறையில் உள்ள சிக்கல்களே. அதேபோல் இந்திய பொருளாதார மந்த நிலையால் ஆட்டோமொபைல் துறை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு துறைகளிலும் தற்போதுள்ள பிரச்னைகளைச் சரிசெய்து மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குச் செல்ல அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்திய தொழில்துறை கூட்டமைப்பான ஃபிக்கியின் தமிழ்நாடு தலைவர் விக்ரம் விஜயராகவனுடன் நாம் நேர்காணல் நடத்தினோம்.

நேர்காணலில் விக்ரம் விஜயராகவன் கூறியவை பின்வருமாறு:

வரி

உற்பத்தி போதிய அளவில் இருந்தாலும், சந்தையில் தேவை குறைவாகவே உள்ளது. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வருமானவரியைக் குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும். அரசு செய்ய வேண்டிய மற்றொரு முக்கிய நடவடிக்கை தொழில்துறையை ஊக்கப்படுத்த வேண்டும். இதன்மூலம், வேலைவாய்ப்புகளை அதிகரித்து, தனிநபர் நுகர்வை அதிகரிக்க முடியும்.

வரி நடைமுறைகள் எளிமையாக்கப்பட வேண்டும்

இது தொடர்பாக அரசு சில நடவடிக்கைகள் எடுத்தாலும் அது போதுமானதாக இல்லை. வரியைப் பொறுத்தவரை தற்போது ஏராளமான சிக்கலான நடைமுறைகள் உள்ளதாகத் தொழில்துறை கருதுகிறது. இது எளிமைப்படுத்தப்பட வேண்டும்.

இதையும் படிங்க : பட்ஜெட் 2020: வரி விலக்கை எதிர்பார்க்கும் வரி வல்லுநர்கள்

நிதித்துறை

வங்கித் துறையில் ஏராளமான சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. வங்கிகளிடமிருந்து போதிய அளவுக்கு கடன் வசதி கிடைத்தால்தான் புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உருவாகும். தற்போதைய சூழலில் வங்கிகள் வாராக்கடன் பிரச்னையில் உள்ளதால் அவை கடன் கொடுக்கும் நிலையில் இல்லை. நிறைய வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வங்கிகள் தொழில்துறையினருக்குத் தாராளமாக நிதி அளிக்க வேண்டும். வங்கிகளில் அரசு மேலும் பணத்தைச் செலுத்த வேண்டும். தற்போது கடன் கொடுப்பதில் தேக்க நிலை உள்ளது. நிறுவனங்களுக்குக் கடன்வசதி கிடைத்தால் மட்டுமே புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

நிறுவனங்களுக்குக் கடன் வசதி கிடைத்தால் மட்டுமே புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்

பெரிய வங்கிகளால் நிறைய கடன் கொடுக்க முடியும். ஆனால் மிகப் பெரிய வங்கிகளாக இருந்தால், அவை உள்ளூர் தொழில்களுக்குப் பலன் தராது. சிறு, குறு தொழில்களின் தேவையைப் பூர்த்தி செய்யாது. அனைத்து வங்கிகளையும் இணைத்து பெரிய வங்கிகளாக மாற்றாமல் அந்தந்த பகுதியின் தேவைக்கு ஏற்ப நடவடிக்கை வேண்டும். கண்மூடித்தனமாக வங்கி இணைப்பு செய்யக்கூடாது.

ஆட்டோமொபைல் துறை

ஆட்டோமொபைல் துறையில் உள்ள பிரச்னை சென்னையை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகளில் முக்கிய பங்கு வகிப்பது ஆட்டோமொபைலும், அது சார்ந்த உற்பத்தி துறைகளும்தான். இதில் புதிய நிறுவனங்கள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. வாகன விற்பனைச் சந்தையில் தேவை அதிகரிக்க கடன் சலுகைகள், வரிச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அதேபோல் பிஎஸ்-6 தரக் கட்டுப்பாடு விதிகள் நடைமுறைக்கு வருவதால் ஏராளமான வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இதன் காரணமாக நிறுவனங்கள் வேலைநாட்களைக் குறைத்துவருகின்றன.

ஆட்டோமொபைல் துறைக்கு சிறப்புச் சலுகைகள் கொடுத்தால்தான் சென்னை முன்னேறும்

இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறைக்கு சிறப்புச் சலுகைகள் கொடுத்தால்தான் சென்னை முன்னேற்றமடையும். இல்லையென்றால் ஆட்டோமொபைல் துறை மீண்டுவர மூன்று ஆண்டுகள் ஆகும். இதனால் சென்னை, புனே போன்ற நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

மின்சார வாகனங்களுக்கு அவசரம்

மின்சார வாகனங்களுக்கு மாற மத்திய அரசு அவசரம் காட்டுவது பிரச்னையை உண்டாக்கும். இது நல்ல திட்டமாக இருந்தாலும் நடைமுறைப்படுத்தும் முறையில் சிக்கல்கள் உள்ளன. ஏற்கனவே பிஎஸ்-6 நடைமுறை காரணமாக ஆட்டோமொபைல் துறை சவால்களைச் சந்தித்துவருகிறது. இந்த நிலையில், உடனடியாக மின்சார வாகனங்களுக்கு மாற அவசரம் காட்டக்கூடாது. பிஎஸ்-6 தொழில்நுட்பத்துக்கு மாறவே நிறுவனங்கள் நிறைய முதலீடுகள் செய்துள்ளன என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

மின்சார வாகனத்துக்கு உடனடியாக மாற வேண்டும் எனக் கூறுவது முறையானது அல்ல

மேலும், மின்சார வாகனங்களில் மிகக் குறைவான உதிரி பாகங்களே பயன்படுத்தப்படும் என்பதால் ஆட்டொமொபைல் துறையைச் சார்ந்துள்ள உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இதனைச் சமாளிக்க உரிய வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் கால அவகாசம் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க : 'மோடி 2.0' அது நிர்மலாவுக்கு சோதனைக்காலம்: பட்ஜெட் 2020இல் அதைச் செய்யுங்க ஃபர்ஸ்ட்!

Intro:Body:
பட்ஜெட் 2020- 2021: ஆட்டோமொபைல் துறைக்கு சிறப்பு சலுகைகள்

சென்னை-

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது நிதித்துதறையில் உள்ள சிக்கல்கள். அதேபோல் இந்த பொருளாதார மந்த நிலையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டோமொபைல் துறை. இந்த இரண்டு துறைகளிலும் தற்போதுள்ள பிரச்னைகளை சரி செய்து மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குச் செல்ல அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்திய தொழில்துறை கூட்டமைப்பான ஃபிக்கியின் வரி, வங்கி, நிதித்துறை தமிழ்நாடு தலைவர் விக்ரம் விஜயராகவன் ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசினார்.

வரிகள் குறைக்கப்பட வேண்டும்

உற்பத்தி போதிய அளவில் இருந்தாலும், சந்தையில் தேவை குறைவாக உள்ளது. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வருமான வரியை குறைக்க வேண்டும், ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். அரசு செய்ய வேண்டிய மற்றொரு முக்கிய நடவடிக்கை தொழில்துறையை ஊக்கப்படுத்துவது. இதன்மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரித்து, தனிநபர் நுகர்வை அதிகரிக்க முடியும். இது தொடர்பாக அரசு சில நடவடிக்கைகள் எடுத்தாலும் அது போதுமானதாக இல்லை.

வரியை பொருத்தவரை தற்போது ஏராளமான சிக்கலான நடைமுறைகள் உள்ளதாக தொழில்துறை கருதுகிறது. இது எளிமைபடுத்தப்பட வேண்டும்.

நிதித்துறை

வங்கித்துறையில் ஏராளமான சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. வங்கிகளிடம் இருந்து போதிய அளவுக்கு கடன் வசதி கிடைத்தால்தான் புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் உருவாகும். தற்போதைய சூழலில் வங்கிகள் வாராக்கடன் பிரச்னையில் உள்ளதால் அவை கடன் கொடுக்கும் நிலையில் இல்லை. நிறைய வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களிடம் அச்ச உணர்வு உள்ளது. வங்கிகள் தொழில்துறையினருக்கு தாராளமாக நிதி அளிக்க வேண்டும். வங்கிகளில் மேலும் பணத்தை அரசு செலுத்த வேண்டும்.தற்போது கடன் கொடுப்பதில் ஒரு தேக்க நிலை உள்ளது. நிறுவனங்களுக்கு கடன் வசதி கிடைத்தால் மட்டுமே புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.


பெரிய வங்கிகளால் நிறைய கடன் கொடுக்க முடியும். ஆனால் மிகப் பெரிய வங்கிகளாக இருந்தால் அவை உள்ளூர் தொழில்களுக்கு பலன் தராது. சிறு, குறு தொழில்களின் தேவையை பூர்த்தி செய்யாது. அனைத்து வங்கிகளையும் இணைத்து பெரிய வங்கிகளாக மாற்றாமல் அந்தந்த பகுதியின் தேவைக்கு ஏற்ப நடவடிக்கை வேண்டும். கண்மூடித்தனமாக வங்கி இணைப்பு செய்யக்கூடாது.

ஆட்டோமொபைல் துறை

ஆட்டோமொபைல் துறையில் உள்ள பிரச்னை சென்னையை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது. நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகளில் முக்கிய பங்கு வகிப்பது ஆட்டோமொபைல் மற்றும் அதுசார்ந்த உற்பத்தி துறைகள்தான். இதில் புதிய நிறுவனங்கள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. வாகன விற்பனை சந்தையில் தேவை அதிகரிக்க கடன் சலுகைகள், வரிச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

அதேபோல் பிஎஸ்- 6 தரக் கட்டுப்பாடு விதிகள் நடைமுறைக்கு வருவதால் ஏராளமான வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இதன் காரணமாக நிறுவனங்கள் வேலைநாட்களை குறைத்து வருகின்றன.

மின்சார வாகனங்களுக்கு அவசரம்

மின்சார வாகனங்களுக்கு மாற மத்திய அரசு அவசரம் காட்டுவது பிரச்னை. இது நல்ல திட்டமாக இருந்தாலும் நடைமுறைப்படுத்தும் முறையில் சிக்கல்கள் உள்ளன. ஏற்கெனவே பிஎஸ் -6 நடைமுறை காரணமாக ஆட்டோமொபைல் துறை சவால்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் உடனடியாக மின்சார வாகனங்களுக்கு மாற அவரசம் காட்டக்கூடாது. பிஎஸ்- 6 தொழில்நுட்பத்துக்கு மாறவே நிறுவனங்கள் நிறைய முதலீடுகள் செய்துள்ள நிலையில் மீண்டும் உடனடியாக மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என்று கூறுவது சரியான முடிவாக இருக்காது. மேலும், மின்சார வாகனங்களில் மிக குறைவான உதிரி பாகங்களே பயன்படுத்தப்படும் என்பதால் ஆட்டொமொபைல் துறையை சார்ந்து உள்ள உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இதனை சமாளிக்க உரிய வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் கால அவகாசம் தேவைப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறைக்கு சிறப்பு சலுகைகள் கொடுத்தால்தான் சென்னை முன்னேற்றமடையும். இல்லையென்றால் ஆட்டோமொபைல் துறை மீண்டு வர 3 ஆண்டுகள் ஆகும். இதனால் சென்னை, புனே போன்ற நகரங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியமானது.
Conclusion:visual in live
Last Updated : Jan 31, 2020, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.