ETV Bharat / business

'மோடி 2.0' அது நிர்மலாவுக்கு சோதனைக்காலம்: பட்ஜெட் 2020இல் அதைச் செய்யுங்க ஃபர்ஸ்ட்!

author img

By

Published : Jan 30, 2020, 7:01 AM IST

நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கான பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டாவது பதவிக்காலத்தில் வழங்கியுள்ளார். இந்தியப் பொருளாதாரம் தள்ளாடும் நிலையில், மத்திய அரசு வருவாயை அதிகரிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்குமா கேள்வி நிலவிவருகிறது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் கிருஷ்ணானந்த் திரிபாதி எழுதிய சிறப்பு கட்டுரை இதோ...

Budget 2020
Budget 2020

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர் முதல் பட்ஜெட்டை இடைக்கால பட்ஜெட்டாகத் தாக்கல் செய்தார். அப்போது, வருமான வரி விலக்கு, பெருநிறுவனங்கள் வரி குறைப்பு என சில மாற்றங்களைக் கொண்டுவந்தார்.


சொன்னது அவ்வளவு! கிடைத்ததோ இவ்வளவுதான்!

இதன்மூலம் அரசுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் எனவும் பட்ஜெட் தாக்கலின்போது நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை வெறும் 7.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வரி திரட்டப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் கூறியதில் வெறும் 45.5 விழுக்காடு மட்டுமே கிடைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை திருப்புவதற்கான பொறுப்பு வழங்கப்பட்ட நாட்டின் முதல் முழுநேர பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமனுக்கு இது கடினமான நேரமாக அமைந்துள்ளது. அருண் ஜேட்லியின் இறப்புக்குப் பின்னர், அந்த இடத்தை பூர்த்திசெய்ய, பாஜக அரசு நிர்மலா சீதாராமனை கொண்டுவந்தது.

மோடி 2.0 அது நிர்மலாவுக்கு சோதனைக்காலம்

மோடி 2.0 தொடங்கியதிலிருந்தே நிர்மலா சீதாராமனுக்கு இது கடினமான நேரம் என்றுதான் கூற வேண்டும். பொருளாதாரம் ஏற்கனவே சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நேரத்தில்தான் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார்.

2018-19ஆம் ஆண்டு 5.8 விழுக்காடாக இருந்த நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 2019-20ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.0 விழுக்காடு அளவுக்கு சரிந்து அதிலே நிலைபெற்றது. மேலும் இது குறைந்து இரண்டாவது காலாண்டில் 4.5 விழுக்காடாக சரிந்தது. இது ஆறு ஆண்டுகள் கண்டிடாத வீழ்ச்சியாகும்.

'அரசுக்கு சவாலாகப் பார்க்கப்படுவது வருவாய் திரட்டல். நாட்டினுடைய வளர்ச்சி சரிந்துகொண்டே செல்வதால் அது நேரடியாக நாட்டின் வருவாய் வசூல் குறைகிறது' என ஃபிட்ச் நிறுவனத்தை சேர்ந்த முதன்மைப் பொருளாதார நிபுணர் சுனில் சின்ஹா தெரிவித்துள்ளார்.

பெருநிறுவன வரியும் பலத்த அடிவாங்கிய பொருளாதாரமும்

மேலும் அண்மையில் வெளியான தகவலின்படி, பெருநிறுவன வரி குறைப்பால், அரசுக்குகு இரண்டாயிரத்து 652 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஏப்ரல்-நவம்பர் காலாண்டில் இரண்டு லட்சத்து 91 ஆயிரத்து 254 கோடி ரூபாயாக இருந்த வருமானம் 2019ஆம் ஆண்டு ஏப்ரல்-நவம்பர் காலாண்டில் இரண்டு லட்சத்து 88 ஆயிரத்து 602 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.

இந்தப் பெருநிறுவன வரி குறைத்ததன் மூலம் நிலைமை இன்னும் மோசமாக சென்றுள்ளது. நவம்பர் 2018ஆம் ஆண்டு 20 ஆயிரத்து 864 கோடி பெருநிறுவன வரி மூலம் வந்த வருமானம் 2019 நவம்பர் மாதத்தில் 15 ஆயிரத்து 846 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.

பட்ஜெட்டில் இதைச் செய்தால் நிலைமை ஓரளவு சீராகும்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), தனிநபர் வருமான வரி வசூலில் ஓரளவு முன்னேற்றம் இருந்தாலும் நிலைமை மோசமாகிக்கொண்டே செல்கிறது எனப் பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர்

மேலும் பெருநிறுவன வரிக்குறைப்பால் அரசுக்கு மென்மேலும் சரிவு ஏற்படும் என சுனில் சின்ஹா தெரிவித்துள்ளார்.

வெறும் ஒன்பது மாதங்களில் 5.8 விழுக்காடாக இருந்த உள்நாட்டு மொத்த உற்பத்தி 4.5 விழுக்காடாக சரிந்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு சிக்கல் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது என பல பொருளாதார கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தாக்கலாகும் பட்ஜெட்டில் மீண்டும் வருமான வரி, பெருநிறுவன வரியில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பட்ஜெட் 2020: தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பு

Intro:Body:

Budget 2020: Nirmala Sitharaman stares at massive shortfall in tax collection this year


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.