ETV Bharat / bharat

இரண்டாம் எலிசபெத்தின் கௌரவப் பட்டியலில் இடம்பெற்ற இந்திய மருத்துவர்

author img

By

Published : Dec 31, 2020, 5:29 PM IST

Breast cancer surgeon Dr Raghu Ram on Queen's Honours list
Breast cancer surgeon Dr Raghu Ram on Queen's Honours list

இந்திய மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ரகுராம் பில்லரிசெட்டி என்பவர் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 2021ஆம் ஆண்டின் கௌரவ பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ஹைதராபாத்: கடந்த 1917ஆம் ஆண்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால் உருவாக்கப்பட்ட அமைப்பு மகாராணியின் கௌரவப் பட்டியல். இது உலகளவில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விருதினைப் பெறுபவர்களின் பட்டியல் லண்டன் கெஜட்டில் வெளியிடப்படும்.

2021ஆம் ஆண்டிற்கான கௌரவ பட்டியலில் இடம்பெற்றவர்களின் பெயர்களை தற்போது லண்டன் கெஜட் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 54 வயதான மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ரகுராம் பில்லரிசெட்டி இடம்பெற்றுள்ளார்.

இவர் கிம்ஸ்- உஷாலக்ஷ்மி மார்பக நோய்கள் மையத்தின் இயக்குநராகவும், உஷாலக்ஷ்மி மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளையின் நிறுவனராகவும், இந்திய அறுவை சிகிச்சை சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.

இந்தியாவில் மார்பக புற்றுநோய் பராமரிப்பு மற்றும் அறுவை சிகிச்சை கல்வியை மேம்படுத்துவதற்கும், இங்கிலாந்து-இந்தியா உறவுகளுக்கும் அவர் செய்த சிறந்த சேவைகளை அங்கீகரிப்பதற்காக பிரிட்டிஷ் பேரரசின் இரண்டாவது மிக உயர்ந்த இந்த ஆணை (நைட்ஹூட் / டேம்ஹூட் தவிர) அவருக்கு வழங்கப்படுகிறது.

இந்த விருது குறித்து கருத்து தெரிவித்த ரகுராம் பில்லரிசெட்டி, "இந்த விருது கிடைத்ததை என்னால் நம்ப முடியவில்லை. இந்த விருது கிடைக்கப்பெற்றதற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்துக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு 'உயிருள்ள பாலமாக' இருப்பதில் பெருமிதமடைகிறேன்" என்றார்.

முன்னதாக மருத்துவர் ரகுராம், முறையே 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ மற்றும் டாக்டர் பி.சி.ராய் தேசிய விருதுகளைப் பெற்ற இளையவர்களில் ஒருவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக உள்ளார்.

1995 ஆம் ஆண்டில் அவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக தகுதி பெற்றதிலிருந்து, கடந்த 25 ஆண்டுகளில் அவர் தனது தொழில் வாழ்க்கையில் புதிய உயரங்களை எட்டியுள்ளார்.

கடந்த 13 ஆண்டுகளில், இந்தியாவில் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சைகளை கணிசமாக மேம்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவர் தெற்காசியாவின் முதல் பிரத்யேக விரிவான மார்பக சுகாதார மையத்தை உருவாக்கினார். மார்பக புற்றுநோயை ஆரம்பகாலகட்டத்திலேயே கண்டறிவதின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். மேலும் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் மக்கள் தொகை அடிப்படையிலான மார்பக புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்தவும் காரணமாக அமைந்தார்.

இதையும் படிங்க: ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருமா? கட்டுக்கதைகளும் உண்மைகளும் : பாகம்-1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.