ETV Bharat / bharat

அயோத்தியில் 25ஆம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை!

author img

By

Published : Mar 23, 2020, 11:57 PM IST

ayodhya news  ramlala bhumipoojan  ram mandir news  idol shifting in ayodhya  bhoomi pujan rituals in ayodhya  Shri Ram Teerth Kshetra Trust news  shuddhikaran in ram mandir news  ayodhya news of ram mandir  அயோத்தியில் 25ஆம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை  அயோத்தி ராமர் கோயில், அயோத்தி, யோகி ஆதித்தியநாத்
ayodhya news ramlala bhumipoojan ram mandir news idol shifting in ayodhya bhoomi pujan rituals in ayodhya Shri Ram Teerth Kshetra Trust news shuddhikaran in ram mandir news ayodhya news of ram mandir அயோத்தியில் 25ஆம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை அயோத்தி ராமர் கோயில், அயோத்தி, யோகி ஆதித்தியநாத்

லக்னோ: அயோத்தியில் ராமர் சிலை தற்காலிக கோயிலுக்குள் வருகிற 25ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெறவுள்ளது. அதன் முதல் கட்டமாக ராம் லல்லாவிலுள்ள ராமர் கோயில் சிலை, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கோயிலுக்கு (மனஸ் பவன்) பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இதற்கான பூஜையில் குறைந்த அளவு மதத் தலைவர்களே கலந்துகொள்வார்கள் என கோயில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதற்கான பூஜைகள் உள்ளிட்ட பணிவிடைகள் இன்று தொடங்கின. இதையடுத்து ராமர் சிலை தற்காலிக கோயிலுக்கு வருகிற 25ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மாற்றப்படும்.

முன்னதாக டெல்லி, பிரயாக்ராஜ், வாரணாசி மற்றும் அயோத்தியைச் சேர்ந்த பதினைந்து வேத பூசாரிகள் ராம ஜென்ம பூமியிலிருந்து மனஸ் பவன் வரையிலான முழு வழியையும் சுத்தம் செய்தனர். இதையடுத்து கருவறையை சுத்தம் செய்யப்படும் என்று தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்தார்.

அடுத்து நடக்கும் சடங்குகள் உள்ளிட்ட பணிகளில் ஸ்ரீ ராம் தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்கள், விம்லேந்திர மோகன் மிஸ்ரா, அனில் மிஸ்ரா மற்றும் அனுஜ் ஜா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் கரோனா அச்சம் காரணமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடும் என்று தெரிகிறது. மேலும் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் பூஜையில் கலந்துகொள்ள மாட்டார் என்றும் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமர் கோயில் பூமி பூஜை உள்ளிட்ட சடங்குகள் கடந்த 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் தேசத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக அது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.