ETV Bharat / bharat

அரசுப் பள்ளிகளின் மதில் சுவற்றை அழகாக்கும் ஓவிய ஆசிரியர்கள்!

author img

By

Published : Dec 29, 2019, 11:49 AM IST

art
art

புதுச்சேரி: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில், பொழிவிழந்த அரசுப் பள்ளிகளின் மதில் சுவர்களில் அழகான விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அழகுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

புதுச்சேரியில் அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ’எல்லோரா நுண்கலை அமைப்பு’ என்ற ஒரு குழுவை அமைத்துள்ளனர். அதன் தலைவராக ஓவியர் முனுசாமி என்பவர் இருந்துவருகிறார். இக்குழுவில் முன்னாள் பள்ளி நண்பர்களும் இணைந்துள்ளார்கள்.

இந்தக் குழுவின் மூலம் புதுச்சேரியில் மதகடிப்பட்டு, வில்லியனூர் வீராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள பாழடைந்து பொலிவிழந்து காணப்படும் பள்ளிகளைத் தேர்வுசெய்து, அதனை தூய்மைபடுத்தும் நோக்கிலும், மாணவர்களிடையே ஓவியத் திறமையை ஊக்குவிக்கவும் அழகான வண்ண ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.

ஓவியத்தால் சுவர் புதுப்பொலிவு பெறுவதுடன், பள்ளி சுவர்களில் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களும் தடுக்கப்படுகிறது. அதன் சுற்றுப் பகுதியும் தூய்மை அடைகிறது. ஓவிய ஆசிரியர்களின் இந்த செயலுக்கு கிராமப் பகுதி மக்கள் இவர்களைப் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

காசு முக்கியமல்ல கலை தான் முக்கியம்!

அரசுப் பள்ளிகளில் மதில் சுவற்றில் சித்திரம் வரைவது தங்களுக்கு நிம்மதியையும், சந்தோஷத்தையும் தருவதாகத் தெரிவிக்கின்றார், காமராஜர் அரசு உயர்நிலைப்பள்ளி நுண்கலை ஆசிரியர் லிங்கா.

சுவற்றில் அழகான ஓவியங்களை வரையும் ஓவிய ஆசிரியர்கள்

சனி, ஞாயிறு உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்களில் சுவர்களில் ஓவியங்கள் வரைவதை சேவை மனப்பான்மையுடன் மட்டுமே செய்துவருகின்றனர். இதற்காக எந்தவித ஊதியமும், அன்பளிப்பும் இவர்கள் பெறுவதில்லை.

இதையும் படிங்க: அடையாளம் தெரியாத நபர்கள் வரைந்த சுவர் ஓவியத்திற்கு வரவேற்பு

Intro:புதுச்சேரியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையுடன் விடுமுறை நாட்களில் அரசு பள்ளிகள் மதில் சுவர்களில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்து பள்ளியை சுற்றிலும் தூய்மைபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்


Body:புதுச்சேரியில் அரசு பள்ளி ஓவிய ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து எல்லோரா நுண்கலை அமைப்பு என்ற ஒரு குழுவை அதன் தலைவர் ஓவியர் முனுசாமி அமைத்து உள்ளர். இக்குழுவில் முன்னாள் பள்ளி நண்பர்களும் இணைந்துள்ளார்கள் இக் குழு மூலம் புதுச்சேரியில் மதகடிப்பட்டு, வில்லியனூர் வீராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தூய்மை படுத்தும் நோக்கில் மாணவர்களிடையே ஓவியத் திறமையை ஊக்குவிக்கவும் ,அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தவும் புதுச்சேரியில் பாழடைந்து பொலிவு இழந்து உள்ள பள்ளிகளில் தேர்வு செய்து சுவற்றுக்கு அருகே சிறுநீர் கழிப்பதை தடுக்கவும் அங்கு விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகின்றனர்
இதனால் பள்ளி மதில் சுவர் புதுப் பொலிவு பெறுவதுடன் அதன் சுற்றுப் பகுதியில் தூய்மை அடைகிறது இதனால் கிராமப் பகுதி மக்கள் இவர்களை பெரிதும் பாராட்டி வருகின்றனர்

இதுகுறித்து இக்குழுவில் உள்ள காமராஜர் அரசு பள்ளி நுண்கலை ஆசிரியர் லிங்கா கூறுகையில்
எல்லோரா நுண்கலை அமைப்பு சார்பில் அரசுப்பள்ளியில் சுவர்களில் விழிப்புணர்வு படங்களும் வாசகர்களும் எழுதி வருவதாகவும் இதுவரை 13 அரசு பள்ளிகளில் சுவர்களை விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து உள்ளோம் சுற்றுச்சூழல் கல்வி விளையாட்டு உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்த ஓவியங்கள் வைத்துள்ளதாக தெரிவித்தனர்
எங்கள் குழுக்கள் தங்களது சனி ,ஞாயிறு உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்களில் அரசு பள்ளிகளை தேர்வு செய்து சுவர்களில் ஓவியங்களை வரைந்து வருகின்றனர் அதற்கு எந்தவித ஊதியமும் அன்பளிப்பு பெறாமல் இதனை செய்து வருவதாகவும் தங்களுக்குத் தேவையான பெயிண்ட் மற்றும் பிரஸ் அந்தந்த பள்ளி ஊழியர்கள் வழங்கினால் போதும் விடுமுறை நாட்களில் அரசு பள்ளி மதில் சுவருடன் சித்திரம் வரைவதில் தங்களுக்கு நிம்மதியான சந்தோஷத்தைத் தருவதாக தெரிவிக்கின்றார் காமராஜர் அரசு உயர்நிலைப்பள்ளி நுண்கலை ஆசிரியர் லிங்கா




Conclusion:புதுச்சேரியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் அரசு பள்ளிகள் மதில் சுவர்களில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்து பள்ளியை சுற்றிலும் தூய்மைபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.