ETV Bharat / bharat

இரவில் ரோந்து செல்வதற்காக காலாட்படை வாகனங்கள் மேம்படுத்தப்படுகிறது - இந்திய ராணுவம்!

author img

By

Published : Sep 8, 2020, 10:36 PM IST

vech
ch

டெல்லி: எல்லைப் பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து செல்வதற்காக காலாட் படை வாகனங்களை மேம்படுத்தும் முயற்சியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்திய - சீனா எல்லைப் பகுதியில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. அவ்வப்போது சீனப் படையினர் இந்தியா நாட்டிற்குள் ஊடுருவ முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. இதனால், எல்லைப் பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் இருக்கும் ராணுவப் படையினர், சீன ராணுவத்தின் சதித்திட்டங்களை முறியடித்து வருகின்றனர். எனவே, அதற்காக இரவு நேரங்களில் எல்லைகளில் ரோந்துப் பணியில் காலாட் படை வீரர்கள் செல்வதற்காக வாகனங்களை மேம்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது காலாட் படை உபயோகிக்கும் BMP-2/2K வாகனம் முதன்முதலில் 1985ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டதால் இரவு நேரத்தில் எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் தொழில் நுட்பம் பொருத்தப்படவில்லை. எனவே, நைட் விஷன் வசதியைப் பொருத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சண்டை மற்றும் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் திறன்களை மேம்படுத்த வேண்டும்.

தற்போது நவீனமயமாக்கப்பட்ட தீயணைப்புக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் தானியங்கி இலக்கு டிரக்கருடன் கூடிய வாகனங்களில் சில குறைகள் உள்ளன. அவற்றில் பகல் மற்றும் இரவு இரண்டையும் சமாளிக்கும் திறன் கிடையாது. தொழில் நுட்பத்தை வைத்தே ஆட்டத்தை ஆரம்பிக்கும் இந்த நவீன போருக்கு வாகனங்கள், ஆயுதங்களை மேம்பாடு செய்வது கட்டாயமாகும். எனவே, ராணுவ வாகனங்களுக்கான ஆயுதங்களை மேம்படுத்துவதற்காக தகுதியான உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்ப விண்ணப்பங்கள் இந்திய ராணுவத்திற்கு கிடைத்துள்ளது'' எனக் குறிப்பிட்டிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.