ETV Bharat / bharat

வெப் சீரிஸ் பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை போலீசில் பிடித்துக்கொடுத்த பொதுமக்கள்?

author img

By

Published : Mar 31, 2023, 3:35 PM IST

பெங்களூருவில் செல்போனில் வெப் சீரிஸை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டதாக தவறாக நினைத்த அக்கம்பக்கத்தினர், அவரை போலீஸில் பிடித்துக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Locals
வெப்

பெங்களூரு: மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிடிஎம் லேஅவுட் பகுதியில் வசித்து வந்தார். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்துவிட்டு பெங்களூருவில் பணிபுரிந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி காலையில், அந்த இளைஞர் ஹெட்போனை அணிந்து கொண்டு செல்போனில் 'ஃபார்ஸி' வெப் சீரிஸை பார்த்துக் கொண்டிருந்தார். ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி நடித்துள்ள ஃபார்ஸி வெப் சீரிஸை மிகுந்த உற்சாகத்துடன் ரசித்து பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது, அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்புவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து மைக்கோ லேஅவுட் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஃபார்ஸி வெப் சீரிஸில் வரும் வசனங்களையே தான் சொல்லிக் கொண்டிருந்ததாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடவில்லை என்றும் இளைஞர் கூறியுள்ளார். பின்னர், அந்த இளைஞரின் நண்பர்களையும் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.

இளைஞர் ஒரே வசனத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்ததாகவும், அந்த வசனத்தில் பாகிஸ்தான் என்ற சொல் இருந்ததால், அப்பகுதிவாசிகள் தவறாக நினைத்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இளைஞர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடவில்லை என்றும் போலீசார் விளக்கமளித்தனர்.

ஃபார்ஸி வெப் சீரிஸை, 'ஃபேமலி மேன்' இணையத்தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கியுள்ளனர். இதில் ஷாஹித் கபூர் நாயகனாக நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதில் ராஷி கண்ணா, ரெஜினா, கே.கே.மேனன், அமோல் பலேகர் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் கடந்த மாதம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: ரோகிணி தியேட்டர் சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாதது - நடிகர் விஜய் சேதுபதி ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.