ETV Bharat / bharat

'சுகாதாரத் தேவைகளை அதிகரிப்பது நிர்வாகத் திறனுக்கு அப்பாற்பட்டது'

author img

By

Published : Apr 19, 2021, 10:15 AM IST

Bed requirement for COVID patients beyond our capacity: Gujarat DyCM
Bed requirement for COVID patients beyond our capacity: Gujarat DyCM

அதிகரித்துவரும் கரோனா பாதிப்புகளுக்கு ஏற்ப, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பது, பிற சுகாதாரத் தேவைகளை அதிகரிப்பது என்பது அரசின் நிர்வாகத் திறனுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது என குஜராத் துணை முதலமைச்சர் நிதின் படேல் கூறியுள்ளார்.

சூரத்: குஜராத் மாநிலத்தின் துணை முதலமைச்சரும், சுகாதாரத் துறை அமைச்சருமான நிதின் படேல் சூரத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, "அதிக நோயாளிகளுக்கு இடமளிக்க மாநில அரசு அதிக இடைவெளியில் படுக்கைகளை அமைத்தும், பதிய படுக்கைகளையும் அமைத்து வரினும், அது தேவைக்கும் குறைவாகவே உள்ளது. குஜராத்தில் ஒவ்வொரு நாளும் 9,000-க்கும் மேற்பட்டோர் கரோனா வைரசால் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் படுக்கைகள், பிற சுகாதார வசதிகளுக்கான தேவை சுகாதாரத் துறை, அரசு நிர்வாகத்தின் திறனுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. தனியார் மருத்துவமனைகளால் கைவிடப்படும் நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.

அதன் காரணமாகவே, அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இருப்பினும் அனைவரையும் தொற்றிலிருந்து காப்பாற்ற அரசு செயல்பட்டுவருகிறது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.