ETV Bharat / bharat

Bank Holidays October 2023 : அக்டோபரில் 14 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோங்க..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 4:52 PM IST

Etv Bharat
Etv Bharat

இந்திய அளவில் வங்கிகளுக்கு வரும் அக்டோபர் மாதத்தில் 14 நாட்கள் விடுமுறையாக உள்ளது. இதனால் உங்கள் பணப்பரிவர்த்தனைகளைத் திட்டமிட்டு முன்னெடுங்கள்.

டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி மாதம்தோறும் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை வெளியிடுகிறது. அந்த வகையில் அக்டோபர் 2023-கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் சுமார் பாதி நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் வாரியாக விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த நாட்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வோம். இதன் காரணமாக வங்கி ரீதியான பணப்பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுத்தலாம்.

வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலைப் பார்ப்போம்;

  • அக்டோபர் 2 (திங்கட்கிழமை) : மகாத்மா காந்தி ஜெயந்தி
  • அக்டோபர் 14 (இரண்டாம் சனிக்கிழமை)
  • அக்டோபர் 15 (ஞாயிறு)
  • அக்டோபர் 18 (புதன்கிழமை): கதி பிஹு (அசாம்)
  • அக்டோபர் 19 (வியாழன்): புத்தாண்டு விழா (குஜராத்)
  • அக்டோபர் 21 (சனிக்கிழமை): துர்கா பூஜை (மகா சப்தமி)
  • அக்டோபர் 22 (ஞாயிறு)
  • அக்டோபர் 23 (திங்கட்கிழமை): மகாநவமி/ ஆயுத பூஜை
  • அக்டோபர் 24 (செவ்வாய்) : தசரா/ விஜயதசமி/ துர்கா பூஜை
  • அக்டோபர் 25, 26, 27 : துர்கா பூஜை/விஜய தசமி, அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறிப்பிட்ட தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
  • அக்டோபர் 28 (நான்காவது சனிக்கிழமை): லட்சுமி பூஜை, பிரகத் திவாஸ்
  • அக்டோபர் 31 (செவ்வாய்): சர்தார் வல்லப்பாய் படேல் ஜெயந்தி

வங்கி விடுமுறை நாட்களில் நிதி பரிவர்த்தனைகளை எவ்வாறு மேற்கொள்வது? வங்கி விடுமுறை நாட்களிலும் இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி சேவைகள் தொடர்ந்து செயல்படுகின்றன. மேலும் UPI சேவைகள் மற்றும் ATM சேவைகளும் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.