அஸ்ஸாம் வெள்ளத்தால் 31.54 லட்சம் மக்கள் பாதிப்பு!

author img

By

Published : Jun 30, 2022, 10:28 PM IST

அஸ்ஸாம் வெள்ளத்தால் 31.54 லட்சம் பேர் பாதிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர் என அஸ்ஸாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை 31.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் இறந்தனர் என்றும்; மேலும் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் எனவும் அஸ்ஸாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று(ஜூன் 30) வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலமாக துணை ஆணையர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதில் நிவாரணம் வழங்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் மறுவாழ்வு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை விரைந்து மதிப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஜூலை 15ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் சேதத்தை மதிப்பிடுவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 20ஆம் தேதிக்குள் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களால் அங்கீகரிக்கப்படும் என்றும், அதன்பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு விநியோகிக்கப்படும் என்றும் அஸ்ஸாம் முதலமைச்சர் கூறியுள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தண்ணீரால் பரவும் நோய்களைத் தடுக்க சுகாதாரத்துறை மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் 79 வருவாய் கோட்டங்களுக்கு உட்பட்ட 2,675 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,12,085 பேர் 569 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் வெள்ளத்தால் 177 சாலைகள் மற்றும் ஐந்து பாலங்கள் சேதமடைந்துள்ளன. மொத்தம் 548 வீடுகள் முழுமையாகவும், 1,034 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பல மாவட்டங்களில் பெரிய அளவில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் எப்.ஐ.ஆர் பதிவுசெய்வதில் தாமதம் கூடாது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.