ETV Bharat / bharat

ஆதரவற்றவர்களின் உடலை சொந்த செலவில் தகனம் செய்யும் பெண் போலீஸ் அலுவலர்!

author img

By

Published : May 20, 2022, 11:07 PM IST

ஆதரவற்றவர்களின் உடலை சொந்த செலவில் தகனம் செய்யும் பெண் போலீஸ் அலுவலர்
ஆதரவற்றவர்களின் உடலை சொந்த செலவில் தகனம் செய்யும் பெண் போலீஸ் அலுவலர்

பஞ்சாப்பில் உரிமை கோரப்படாத உயிரிழந்தவர்களின் உடல்களை பெண் போலீஸ் அலுவலர் ஒருவர் தனது சொந்த செலவில் தகனம் செய்து வருகிறார்.

பஞ்சாப் (லூதியானா): பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசிப்பவர் சுனிதா ராணி. இவர் பஞ்சாப் காவல்துறையில் உதவி துணை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் உரிமை கோரப்படாத உயிரிழந்தவர்களின் உடல்களை தனது சொந்த செலவில் இறுதி சடங்கு செய்து தகனம் செய்து வருகிறார். 2019ஆம் ஆண்டு முதல் இந்த சேவையைச் செய்து வரும் சுனிதா ராணி, இதுவரை 2200 ஆதரவற்ற உடல்களை தகனம் செய்துள்ளார். இவரது சேவை குறித்து காவல்துறையில் பணியாற்றும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்துள்ளது.

இதுகுறித்து சுனிதா ராணி ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "இந்த சேவையை நான் தனி ஒரு ஆளாக செய்து வருகிறன். சேவை தொடங்கிய போது சிலர் உடனிருந்தனர். பின்னர் அவர்கள் விலகினர். போலீஸ் பணியில் கிடைக்கும் சம்பளம் கொண்டு ஆதரவற்ற உடல்களை தகனம் செய்து வருகிறேன்.

உயிரிழந்த ஆதரவற்றவர்களின் உடலை சொந்த செலவில் தகனம் செய்யும் பெண் போலீஸ் அலுவலர்

லூதியானா ஒரு பெரிய நகரம், இங்கு குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. ஏரிகள், விபத்தில் சிக்கியவர்களின் உடல்கள் மீட்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடலை முறையாக உடற்கூராய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின், இறுதி சடங்கு மேற்கொண்டு தகனம் செய்யப்படுகிறது.

ஆதரவற்றவர்களின் உடலை சொந்த செலவில் தகனம் செய்யும் பெண் போலீஸ் அலுவலர்
ஆதரவற்றவர்களின் உடலை சொந்த செலவில் தகனம் செய்யும் பெண் போலீஸ் அலுவலர்

கரோனா பெருந்தொற்று பரவலின் போது, அதிகமான உடல்கள் தகனம் செய்யப்பட்டது. லூதியானாவின் சேலம் தபரி என்ற இடத்தில் உள்ள சுடுகாட்டில் உடல்கள் தகனம் செய்யப்படுகிறது. ஒரு உடலை தகனம் செய்ய ரூ.1600 ஆகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த சேவை எனக்கு மன நிம்மதி, திருப்தி அளிக்கிறது. ஆதரவற்றவர்களின் உடலை தகனம் செய்யும் போது அவர்களின் மகள், சகோதரியாகவே எண்ணி செய்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

2025ஆம் ஆண்டு காவல்துறை பணி ஓய்வு பெற உள்ள சுனிதா ராணி, தொடர் இந்த சேவையை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். சுனிதா ராணியின் இந்த மனிதநேய சேவையை பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றன.

இதையும் படிங்க: நவ்ஜோத் சிங் சித்து நீதிமன்றத்தில் சரண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.