ETV Bharat / bharat

அமெரிக்காவின் விவசாய பொருட்களுக்கு வரியை குறைத்த இந்தியா! என்ன காரணம்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 1:21 PM IST

american-agri-products-us-welcomes-indias-nod-to-lower-tariffs
அமெரிக்க விவசாய பொருட்களுக்கு வரியை குறைத்த இந்தியா

American Agri Product: அமெரிக்காவின் விவசாய பொருட்கள் மீதான வரிகளை குறைக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்க விவசாயத்துறை செயலர் டாம் வில்சாக் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அமெரிக்காவின் வான்கோழி, வாத்து, கிரேன்பெரிஸ் மற்றும் பளுபேரிஸ் மீதான வரியை குறைக்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதை அமெரிக்கா வரவேற்கிறது. மேலும், அமெரிக்காவின் விவசாய உற்பத்தியாளர்களுக்கான புதிய சந்தையாக இவை அமையும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பல விவசாய பொருட்கள் மீதான வரிகளை குறைக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • One Earth.
    One Family.
    One Future.

    That’s the focus of this G20 Summit: building resilient infrastructure, making quality infrastructure investments, and creating a better future that represents greater opportunity, dignity, and prosperity for everyone. pic.twitter.com/2HDIf5RDj0

    — President Biden (@POTUS) September 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் டாம் வில்சாக் அறிக்கையில், கடந்த வாரம் அமெரிக்கா - இந்தியா ஆகிய இரு நாடுகள் உலக வர்த்தக அமைப்பின் கீழ் கடைசி நிலுவை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகவும், இதன் மூலம் அமெரிக்காவின் விவசாய பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதில், பதப்படுத்தப்பட்ட வான்கோழி மற்றும் வாத்துகள், கிரேன்பெரிஸ் மற்றும் பளுபேரிஸ், உறைந்த, உலர்ந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட கிரேன்பெரிஸ் மற்றும் ப்ளுபேரிஸ் ஆகிய பொருட்கள் அடங்கும்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற G20 மாநாட்டிற்கு முன்னதாக செப்டம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் சந்திப்பின் போது சில முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, அமெரிக்கா - இந்தியா இடையே ஆன உலக வர்த்தக அமைப்பின் 7வது மற்றும் கடைசி நிலுவையிலிருந்த கோப்புகளும் தீர்வு காணப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: London: இங்கிலாந்து பாராளுமன்றத்தை சீனா உளவு பார்த்தாக பிரதமர் ரிஷி சுனக் குற்றச்சாட்டு!

கடந்த ஜீன் மாதம் அரசு பயணமாக அமெரிக்கவிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்ற போது உலக வர்த்தக அமைப்பின் கீழ் 6 கோப்புகளுக்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. USDA மற்றும் USTR தற்போது நம்பிக்கை மற்றும் வலிமையான வர்த்தகத்தை இணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவுடன் இணைத்துள்ளது அமெரிக்காவின் விவசாய பொருட்கள் ஏற்றுமதிக்கு புதிய நம்பிக்கை அளித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிக் லார்சன், அமெரிக்காவின் விவசாய பொருட்களுக்கு வரிகளை இந்தியா குறைத்து இருப்பது வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார். அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் மார்க் வார்னர் மற்றும் டிம் கெய்ன் கூறுகையில், USTRயில் இந்தியா இணைந்து இருப்பது மற்றும் அமெரிக்க விவசாய பொருட்களுக்கு வரிக்குறைப்பு ஆகியவை இரு நாடுகளுக்கு இடையே வலிமையான உறவை மேம்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் பறந்த அரசு பள்ளி மாணவர்கள்... மகிழ்ச்சியின் உச்சத்தில் மாணவிகள் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.