சர்வதேச வழித்தடத்தில் பறக்க தயாராகும் ஏர் இந்தியாவின் முதல் போயிங் விமானம்...

author img

By

Published : Nov 29, 2022, 11:36 AM IST

ஏர் இந்தியா

டாடாவின் ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனம் போயிங் நிறுவனத்தின் முதல் 777-200 LR விமானத்தை பெற்றது. சர்வதேச விமான போக்குவரத்தை விரிவுபடுத்த முனைப்பு காட்டி வரும் எர் இந்தியா, போயிங் விமானம் வாங்கியதன் மூலம் பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி: போயிங் நிறுவனத்தின் போயிங் 777-200 LR விஹான் என்ற விமானத்தை டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் முதல் முறையாக பெற்றது. இந்திய சிவில் விமான போக்குவரத்தில் புது அத்தியாயமாக ஏர் இந்தியாவின் VT-AEF விமான சேவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து சர்வதேச நாடுகளுக்கு பயணமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு விமான போக்குவரத்தை விரிவுபடுத்துவதாக அறிவித்த ஏர் இந்தியா நிறுவனம், 6 புதிய விமான சேவைகளை அறிமுகப்படுத்தியது. மேலும் சர்வதேச விமான சேவையை மேம்படுத்தும் வகையில் அடுத்தக் கட்டமாக போயிங் நிறுவனத்தின் விமானத்தை ஏர் இந்தியா வாங்கி உள்ளது.

டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து போயிங் விமானத்தை ஒப்பந்த அடிப்படையில் ஏர் இந்தியா பெற்றுள்ளது. பிரீமியம் எக்கானமி மற்றும் சாதாரண வகுப்புகள் உள்ளிட்டவற்றுடன் போயிங் விமானத்தை இயக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக போயிங் விமானம் டெல்லி வந்தடைந்ததாகவும், டிசம்பர் முதல் மார்ச் இடையிலான காலக்கட்டத்தில் சர்வதேச சேவையை தொடங்கும் என்று கூறப்படுகிறது. சர்வதேச விமான போக்குவரத்து வர்த்தகத்தில் நிலையான ஈடுபாடு, சிறந்த வாடிக்கையாளர் சேவை, தொழிநுட்பம் உள்ளிட்டவைகளை நிலைப்படுத்த அடுத்த 5 ஆண்டுகளுக்கு போயிங் விமானத்தின் விஹான் ஏ.இ. திட்டத்தில் இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

மத்திய அரசிடம் இருந்து 69 ஆண்டுகளுக்கு பின் பூர்வீக சொத்தான ஏர் இந்தியாவை வாங்கிய டாடா குழுமம் அதில் பல்வேறு மாற்றங்களை நடைமுறைபடுத்தியது. பயணிகளுக்கான நேர மேலாண்மையில் சிறந்த செயல்பாடு காட்டியதாக அண்மையில் சிவில் விமான போக்குவரத்து நிறுவனம் நடத்திய ஆய்வில் ஏர் இந்தியா முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாக். ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர்கள்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.