ETV Bharat / bharat

Tax on Taj: வீட்டு வரி செலுத்தாததால் தாஜ்மஹாலுக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்!

author img

By

Published : Dec 19, 2022, 5:13 PM IST

வீட்டு வரி செலுத்தவில்லை என தாஜ்மாஹலுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் அபராதம் விதித்து ஆக்ரா நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தாஜ்மஹால்
தாஜ்மஹால்

ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் சின்னமாகவும் விளங்கும் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க உள்நாடு மற்றும் உலக நாடுகளில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகின்றனர். இந்நிலையில், முறையாக வீட்டுவரி செலுத்தாத காரணத்திற்காக தாஜ்மஹாலுக்கு 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஆக்ரா நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் வீட்டு வரி செலுத்தாத காரணத்திற்காக 88 ஆயிரத்து 784 ரூபாயும், அபராதத் தொகையும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் வரியை 15 நாட்களுக்குள் செலுத்துமாறு இந்திய தொல்லியல் துறைக்கு, ஆக்ரா நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்நிலையில், வீட்டு வரி அபராதம் குறித்து இந்திய தொல்லியல் துறை விளக்கமளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது, "ஆக்ரா நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டு வரி வசூலிக்கும் உரிமையை சாய் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கி நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் செய்து உள்ளதாகவும், செயற்கைகோள் படங்கள் மேப்பிங் மூலம் தனியார் நிறுவனம் தவறுதலாக வீட்டு வரி ரசீது அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இதுகுறித்து ஆக்ரா நகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி உள்ளதாக இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "திமுகவுக்கு தைரியமிருந்தால் தொட்டுப்பாருங்க" - நாராயணன் திருப்பதி சவால்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.