ETV Bharat / bharat

அதானி குழும பங்குகள் தொடர் சரிவு!

author img

By

Published : Feb 3, 2023, 9:57 AM IST

அதானி குழும பங்குகள் தொடர் சரிவு!
அதானி குழும பங்குகள் தொடர் சரிவு!

ஹிண்டன்பர்க் அறிக்கையை அடுத்து அதானி குழும பங்குகள் தொடர்ந்து 6வது நாளான நேற்றும் ரூ.1.76 லட்சம் கோடியை இழந்துள்ளன.

சென்னை: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், கடந்த ஜனவரி 27 அன்று அதானி குழுமத்தின் மீது மோசடி குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இதற்கு முதலில் ஜனவரி 29 அன்று 413 பக்க பதில் அறிக்கையை அதானி குழுமம் வெளியிட்டது.

இதனையடுத்து இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இதனிடையே அதானியின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இதன்படி நேற்று (பிப்.2) மட்டும் ரூ.1.76 லட்சம் கோடி பங்குகளை அதானி குழுமம் இழந்துள்ளது. முக்கியமாக அதானி எண்டர்பிரைசஸ் 26 சதவித பங்குகளை இழந்து, 20,000 கோடியை FPOஇல் விட்டுள்ளது.

மேலும் அதானியின் 10 நிறுவன பங்குகள் ரூ.8.76 லட்சம் கோடியை இழந்துள்ளன. மேலும் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவற்றின் குறுகிய கால பங்குகளின் ASM, பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகியவற்றின் தரவுகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டு வருகிறது.

இதனிடையே பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், அதானி குழும மோசடி குறித்து எதிர்கட்சிகள் தரப்பு கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதானி நிறுவனங்களில் ரூ.15,400 கோடி முதலீடு.. அபுதாபி முதலீட்டு நிறுவனம் திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.