ETV Bharat / bharat

இந்தியாவின் கோவிட் பாதிப்பு நிலவரம்

author img

By

Published : Mar 2, 2022, 11:15 AM IST

Union Health Ministry
Union Health Ministry

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7,554 கோவிட் பாதிப்பும், 223 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 554 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, 7 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நேற்று, ஒரே நாளில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 223ஆக பதிவாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு ஐந்து லட்சத்து 14 ஆயிரத்து 246 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 85 ஆயிரத்து 680 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியே 23 லட்சத்து 38 ஆயிரத்து 673 ஆக உள்ளது. இதுவரை மொத்தம் 177.79 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

அதில், நேற்று (பிப்.22) மட்டும் 8 லட்சத்து 55 ஆயிரத்து 862 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 96 கோடியே 59 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 79 கோடியே 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். சுமார் ஒரு கோடியே 89 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை டோஸ்சும் செலுத்தியுள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: ஒடிசா உள்ளாட்சி தேர்தல்: நவீன் பட்நாயக் இமாலய வெற்றி; பாஜக படுதோல்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.