ETV Bharat / bharat

டெல்லியில் மாணவி மீது ஆசிட் வீச்சு: ஃப்ளிப்கார்ட் பதில்

author img

By

Published : Dec 20, 2022, 12:13 PM IST

ஃப்ளிப்கார்ட் பதில்
ஃப்ளிப்கார்ட் பதில்

டெல்லியில் மாணவி மீது ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.

புதுடெல்லி: டெல்லியில் கடந்த புதன்கிழமை (டிச.14) பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த 17 வயது மாணவி மீது முகமூடி அணிந்த இருவர் ஆசிட் வீசியதில் பலத்த காயம் அடைந்தார். முக்கிய குற்றவாளிகளான சச்சின் அரோரா மற்றும் அவரது நண்பர்கள் ஹர்ஷித் அகர்வால் , வீரேந்திர சிங் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆசிட்டை ஆன்லைன் வழியாக குற்றவாளி வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு பதிலளித்த ஃப்ளிப்கார்ட், ஆக்ராவை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் ஆசிட் வாங்கப்பட்டதாக கூறியது. இந்நிலையில் உத்தரபிரதேச நகரத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.

600 ரூபாய்க்கு ஆசிட் வாங்கப்பட்டதாக சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் சாகர் ப்ரீத் ஹூடா தெரிவித்தார்.

இதையும் படிங்க: சோபியான் துப்பாக்கிச்சூடு: 3 லக்‌ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.