ETV Bharat / bharat

Viral photo: சிங்கத்துடன் செல்ஃபி எடுத்த சுற்றுலா பயணிகள்: வலுக்கும் எதிர்ப்பு

author img

By

Published : Nov 18, 2021, 8:10 PM IST

Gujarat
Gujarat

குஜராத்தில் கிர் வனப்பகுதியில் சாலையில் அமர்ந்திருக்கும் சிங்கத்தை மிக அருகிலிருந்தவாறு வாகனத்திலிருந்தபடி ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜூனாகத் (குஜராத்): வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை மீறும் வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அந்தப் புகைப்படத்தில் சாலையில் சிங்கம் ஒன்று அமர்ந்திருக்கிறது. அதற்கு மிக அருகில், வாகனத்திலிருந்தபடி ஆபத்தை உணராமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்ஃபியும் புகைப்படமும் எடுக்கின்றனர்.

இந்தப் புகைப்படம் குஜராத்தின் கிர் வனப்பகுதியில் (Gir Forest) உள்ள சஃபாரி பூங்காவில் (safari park) எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை க்ரீன் சர்க்கிள் (Green circle) என்ற டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

மேலும் இந்தப் படத்தை வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலரும், முன்னாள் நீதிபதியுமான ஜெய்தேவ் தாதால் ரீ-ட்விட் செய்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வனவிலங்கு சட்டத்தை மீறியதற்காக புகைப்படத்தில் காணப்படும் சுற்றுலாப் பயணிகள், வனவிலங்குப் பூங்கா அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'பாஜகவின் போராட்டம் கேலிக்குரியது' - ஜி. ராமகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.