ETV Bharat / bharat

சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு... வீடியோ எடுத்து மிரட்டிய 7 பேர் கைது...

ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

4-minors-among-7-arrested-for-raping-minor-girl-in-rajasthan

author img

By

Published : Jun 17, 2022, 4:16 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் ஜூன் 14ஆம் தேதி 15 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது இன்று (ஜூன் 17) செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், "தோல்பூரில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறிய வந்த 17 வயது சிறுவன், ஜூன் 14ஆம் தேதி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்தான்.

இதனடிப்படையில் சிறுவனின் வீட்டிற்கு சென்ற சிறுமியை அங்கு ஏற்கனவே காத்திருந்த 6 பேருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தான். இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்ததுடன், இதுகுறித்து வெளியில் சொன்னால் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவதாக 7 பேரும் சிறுமியை மிரட்டி உள்ளான்.

இதனால் சிறுமி வெளியில் சொல்லவில்லை. ஆனால், 2 நாள்கள் கழித்து அந்த கும்பல் சிறுமியின் உறவினர்களிடம் வீடியோவை காட்டி ரூ. 1 லட்சம் பணம் கேட்டுள்ளனர். இதையடுத்து எங்களுக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்படி 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இருவர் சிறுவர்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான 5 சிறுவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதில் போலீசார் முனைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.