ETV Bharat / bharat

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் இந்தியா வருகை!

author img

By

Published : Feb 18, 2023, 12:11 PM IST

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சீட்டாக்கள் குவாலியர் வருகை!
தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சீட்டாக்கள் குவாலியர் வருகை!

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள்(cheetahs) மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் விமான நிலையத்திற்கு வந்தடைந்தன.

போபால்: கடந்த 2022 செப்டம்பர் 17, பிரதமர் மோடியின் பிறந்தநாள் அன்று நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கி புலிகள் (5 பெண் மற்றும் 3 ஆண்), பிரதமரால் மத்தியபிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சீட்டாக்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன்படி தென்னாப்பிரிக்காவில் இருந்து 7 ஆண் மற்றும் 5 பெண் என மொத்தம் 12 சீட்டாக்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியருக்கு இன்று (பிப்.18) காலை 10 மணிக்கு கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து இவை ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவுக்கு நண்பகல் 12 மணிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அரை மணி நேரம் அவைகள் தனிமைப்படுத்தப்பட உள்ளது.

இதற்காக 10 தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் தயாராக உள்ளதாக குனோ தேசிய பூங்காவின் இயக்குனர் உத்தம் ஷர்மா கூறியுள்ளார். இந்த 12 சிவிங்கி புலிகள் மத்தியபிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர். முன்னதாக மத்திய அரசின் சீட்டாக்களை மறுஅறிமுகம் செய்யும் திட்டத்திற்காக இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் இந்திய வனவிலங்குகள் சட்டத்தின்படி, வெளிநாடுகளில் இருந்து விலங்குகளை இறக்குமதி செய்யும்போது, இறக்குமதிக்கு முன்னரே தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதேபோல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட அடுத்த 30 நாட்களுக்கும் அவை தனிமைப்படுத்தப்பட வேண்டும். முன்னதாக 1947ஆம் ஆண்டு தற்போதைய சத்தீஸ்கர் மாநிலமும் அப்போதைய கொரியா மாவட்டத்தில் இறுதியாக ஒரு சீட்டா உயிரிழந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

  • An IAF C-17 aircraft carrying the second batch of 12 Cheetahs landed at Air Force Station Gwalior earlier today, after a 10-hour flight from Johannesburg, South Africa.

    These Cheetahs were later airlifted in IAF helicopters and have reached the Kuno National Park.

    (Pics: IAF) pic.twitter.com/9ayglmaZ8O

    — ANI (@ANI) February 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனையடுத்து 1952ஆம் ஆண்டு இந்தியாவில் சீட்டாக்கள் இல்லை என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2009ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலான மத்திய சுற்றுச்சுழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ‘சீட்டா திட்டம்’ என்பதை அறிமுகப்படுத்தி, சீட்டாக்களை மீண்டும் இந்தியாவில் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பெண் சிவிங்கிப்புலிக்கு உடல்நலக்கோளாறு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.