ETV Bharat / state

கோமாவில் உள்ள சிறுவனை பார்வையிட்ட எம்.எல்.ஏ: தவறான சிகிச்சை உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை என உறுதி

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்து கோமா நிலையில் உள்ள சிறுவனை பார்வையிட்டு மருத்துவர்களிடம் உடல்நிலை முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

கம்பம் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா
கம்பம் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 30, 2026 at 5:05 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தேனி: பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கம்பம் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா கூறியுள்ளார்.

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பவருடைய 14 வயது மகன் நிவாஸ் குமார். இவருக்கு கடுமையான சளி மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது சிறுவனுக்கு மூக்கில் சதை வளர்ந்துள்ளதாகவும், அதனை அகற்றுவதற்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கம்பம் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா (ETV Bharat Tamil Nadu)

தற்போது அங்கு கோமா நிலையில் உள்ள சிறுவனை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்து கோமா நிலையில் உள்ள சிறுவனை பார்வையிட்டு மருத்துவர்களிடம் உடல்நிலை முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா, ”நிவாஸ் என்ற மாணவனுக்கு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதன் மூலம் அவர் கோமா நிலைக்கு சென்றதாக எனக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தேனி அரசு மருத்துவமனையில் அச்சிறுவனை சந்தித்தேன். பின்னர் மருத்துவர்கள் விவரங்களை தெரிவித்தனர்.

அதே போல் சுகாகாரத்த்துறை அமைச்சருக்கு இந்த சிறுவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து தகவல் தெரிந்த நிலையில், அவர் சென்னையில் இருந்து துணை இயக்குநரை அனுப்பி சிறுவனுக்கான சிகிச்சை குறித்து கேட்டுள்ளார். அவர்கள் மாணவன் நிவாஸை ஆய்வு செய்துவிட்டு அவரது சிகிச்சை விவரங்களை எடுத்துக் கொண்டு சென்னை சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: 32 ஆயிரத்துடன் பணப்பையை தவறிட்ட பெண் - திருப்பி கொடுத்த பழக்கடை மூதாட்டியை கெளரவித்த கலெக்டர்

நாளை நானும் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசவுள்ளேன். மருத்துவர் தவறு செய்திருந்தால் அவருக்கான தண்டனையை தமிழ்நாடு அரசு நிச்சயம் பெற்றுக் கொடுக்கும். மாணவன் 54 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில், முன்னேற்றம் இல்லை. சிறுவன் கடினமான தருணத்தில் உள்ளார். அவரது மருத்துவ அறிக்கை வந்தவுடன், தவறு செய்த மருத்துவருக்கு தவெக அரசு தண்டனை பெற்றுக் கொடுக்கும், அதற்கான நிவாரணத்தையும் உறுதியாக பெற்றுக் கொடுப்போம்” என கூறினார்.