ETV Bharat / snippets

சிபிசிஐடி வளையத்திற்குள் நெல்லை ஜெயக்குமாரின் குடும்பத்தினர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 3:46 PM IST

மறைந்த ஜெயக்குமார் புகைப்படம்
மறைந்த ஜெயக்குமார் புகைப்படம் (credits- ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று 3வது நாளாக கரைச்சுத்து புதூரில் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கின் புகார்தாரர்களான ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா, ஜெஃப்ரின், ஜோ மார்ட்டின் மற்றும் அவரது மகள் ஆகியோர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, தங்களுக்கு தெரிந்த தகவல்களை எழுத்துப்பூர்வமாக வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி எஸ்பி முத்தரசி, ஆயுதப்படை வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஜெயக்குமார் மர்ம மரணம் வழக்கு தொடர்பாக, வழக்கை விசாரித்த அதிகாரிகளிடம் பெறப்பட்ட தகவல் மற்றும் கிடைக்கப் பெற்ற தடயங்கள் உள்ளிட்டவைகள் குறித்து சிபிசிஐடி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.