ETV Bharat / snippets

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 12:00 PM IST

தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் கைதானவர்
தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் கைதானவர் (credits-ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சித்திரைவேல் மகன் ஸ்ரீரங்கன் (50) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கை அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா புலன் விசாரணை செய்து கடந்த 20.08.2020 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றவாளியான ஸ்ரீரங்கன் என்பவருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 7000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.