கெட்டுப்போன தந்தூரி சிக்கனை விற்றதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி புகார்! - Spoiled tandoori chicken complaint

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 2:26 PM IST

thumbnail
நாம் தமிழர் நிர்வாகி கெட்டுப்போன தந்தூரி சிக்கன் விற்றதாக புகாரளிக்கும் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் துரித உணவு மற்றும் தந்தூரி சிக்கன், ஷவர்மா உள்ளிட்ட உணவுகளை உண்டு சிலர் மயக்கம் அடைந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மேலும், கெட்டுப்போன உணவை விற்கும் பல உணவகங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் செங்கம், திருவள்ளுவர் நகர் பகுதியில் இயங்கி வரும் சிட்டி பர்கர் என்ற தனியார் உணவகத்தில், நாம் தமிழர் கட்சியின் திருவண்ணாமலை மேற்கு மாவட்டச் செயலாளர் பாலாஜி என்பவருக்கு கெட்டுப்போன தந்தூரி சிக்கன் வழங்கப்பட்டதாகவும், தந்தூரி சிக்கன் கெட்டுப்போன வாடை வீசுவதாக கடை உரிமையாளரிடம் புகார் கூறினால், இது மசாலா வாசனை எனக் கூறி தட்டிக் கழிப்பதாக பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இதனையடுத்து, கெட்டுப்போன தந்தூரி சிக்கனை சாப்பிட்ட பிறகு உடல் உபாதைகள் ஏற்பட்டு, உயிரிழந்த பிறகு எடுக்கும் நடவடிக்கை தேவையற்றது எனவும், உடனடியாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.