LIVE: மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை! - PM Modi Mettupalayam rally

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 10:36 AM IST

Updated : Apr 10, 2024, 3:16 PM IST

thumbnail

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு நேற்று வருகை தந்தார். சென்னையில் போட்டியிடும் தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோருக்காக பிரமாண்ட வாகனப் பேரணி மூலம் ஆதரவு திரட்டினார்.அடுத்தபடியாக பிரதமர் மோடி, வேலூரில் என்டிஏ கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்காக வாக்கு சேகரித்தார். இதனிடையே, வேலூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதன் மூலம், கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாக்கு சேகரித்தார். இதற்காக பலத்த பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றி வரும் மோடி, நீலகிரி வேட்பாளர் எல்.முருகன், கோவை வேட்பாளர் அண்ணாமலை, பொள்ளாச்சி வேட்பாளர் கே.வசந்தகுமார், பாமகவின் சேலம் வேட்பாளர் ந.அண்ணாதுரை உள்ளிட்டோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.இம்மாதம் 13ஆம் தேதி பெரம்பலூரிலும், 14-ல் விருதுநகரிலும், 15-ல் நெல்லையிலும் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Apr 10, 2024, 3:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.