தஞ்சையில் திருஞானசம்பந்தர் குருபூஜை; முத்து பல்லாக்கு விழா கோலாகலம்! - muthu pallakku festival in Thanjai

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 5:37 PM IST

thumbnail
தஞ்சையில் முத்து பல்லாக்கு விழா நடைபெற்ற காட்சி (Credits-ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் புகழ்பெற்ற முத்து பல்லாக்கு விழாவானது திருஞானசம்பந்தர் குருபூஜையை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகரில் முத்து பல்லாக்கு விழாவானது மிகவும் புகழ்பெற்றதாகும். 

தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் முத்து பல்லாக்கு விழா, வைகாசி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் நடைபெறும். அன்றைய தினம் சைவக் குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர்-க்கு குரு பூஜை நடக்கும், திருஞானசம்பந்தர் இறைவனிடம் ஐக்கியம் ஆன நாளாக இந்நாள் கருதப்படுகிறது.  

இதனை முன்னிட்டு, நள்ளிரவு முதல் பகல் வரை தஞ்சாவூரில் பல்லாண்டுகளாக முத்து பல்லாக்கு விழா பல்வேறு கோயில்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், இந்தாண்டு நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை முத்து பல்லாக்கு விழா நடைபெற்றது. 

பிரசித்தி பெற்ற விநாயகர் மற்றும் முருகன் கோயிலில் இருந்து சுவாமி பல்லாக்குகளில் புறப்பட்டு, தஞ்சையின் ராஜ வீதிகளில் வலம் வந்தது. முத்து பல்லாக்கில் வந்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் தரிசனம் செய்து வழிபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.