Live: சிதம்பரம், மயிலாடுதுறை வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்! - lok sabha election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 7:02 PM IST

Updated : Apr 6, 2024, 8:13 PM IST

thumbnail

சிதம்பரம்: வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலானது நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்தியக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 06) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து நடக்கும்  பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதை நேரலையில் காணலாம். இரவு பிரச்சாரத்தை முடிக்கும் அவர், அங்கிருந்து கார் மூலம் கடலூர் வழியாகப் புதுச்சேரி செல்கிறார். தொடர்ந்து நாளை (ஏப்ரல் 07) புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதலமைச்சரின் வருகையையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Last Updated : Apr 6, 2024, 8:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.