உயிருக்குப் போராடும் தாய் யானை! சுற்றி... சுற்றி... வரும் 3 வயது குட்டி யானை! - baby elephant at Sathyamangalam

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 11:01 PM IST

thumbnail

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி காட்டுக்குள் அலைகின்றன. 

இதற்கிடையே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் புதுக்குய்யனூர் என்ற இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, வனப்பகுதியில் உடல் நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்துக் கிடப்பதையும், அந்த யானையைச் சுற்றி 3 வயதுள்ள குட்டி யானை நடமாடுவதையும் கண்டனர். 

இது குறித்து உடனடியாக வனத்துறை உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர், சம்பவ இடத்திற்குச் சென்று குட்டி யானையை மீட்டுப் பராமரித்து வருகின்றனர். 

இந்நிலையில், உடல் நலமின்றி படுத்துக் கிடக்கும் பெண் யானைக்குச் சிகிச்சை அளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது குட்டி யானைக்கு 3 வயது என்பதால் அது இயல்பாகவே தீவனம் எடுத்துக்கொள்வதாகவும், பைப் வழியாகத் தண்ணீர் கொடுத்தால் குடித்துக்கொள்வதாகவும் அதிகாரிகள் கூறினர். இதனால் இந்த குட்டி யானை சக யானைக்கூட்டத்துடன் தானாகவே சேர்ந்து கொள்ளும் எனவும் வனத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாயைப் பிரிந்து குட்டி யானைக்கு, 2 மாதமே ஆகியிருந்தது. பால் குடிக்கும் குட்டி என்பதால் பிற யானைக்கூட்டத்துடன் சேர்க்க முடியவில்லை, இம்முறை யானைக்கூட்டம் சேர்த்துக் கொள்ளும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். தாய் யானைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குட்டி யானைக்குத் தேவையான பசும் புல் மற்றும் தீவனங்கள் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.