Live: தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம்! - lok sabha election 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 7:28 PM IST

Updated : Apr 11, 2024, 7:35 PM IST

thumbnail

தேனி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொள்கிறார். நேற்று ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ்ஸை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று மாலை 5 மணி முதல் தேனியில் பல்வேறு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதில் முதலாவதாக அல்லிநகரம் பகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதனை தொடர்ந்து இன்று வெங்கடாச்சலபுரம், ஸ்ரீரங்கபுரம், நாகலாபுரம் பிள்ளையார் கோயில், தாடிச்சேரி பேருந்து நிலையம், தர்மாபுரி தேவர் சிலை, கோட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அமமுக இந்த தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. மேலும் இந்த கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் இருக்கின்றனர். டிடிவி தினகரன் அமமுக சார்பில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். சில நாட்களுக்கு முன்பு கோவையில் பிரச்சாரத்தில் தாமரை சின்னத்தை வீழ்த்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Last Updated : Apr 11, 2024, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.