திருப்பத்தூரில் திடீரென பற்றி எரிந்த இருசக்கர வாகனம்.. பதைபதைக்கும் வீடியோ காட்சி! - two wheeler caught fire

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 10:38 PM IST

thumbnail
()

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட கச்சேரி தெருவைச் சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் விஷ்ணுவர்தன் (23). இவர் எம்பிஏ., முதுகலை பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். இந்த நிலையில், இன்று (ஏப்.22) தூய நெஞ்சக் கல்லூரி பகுதியில் இருந்து தனது வீட்டிற்கு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாகச் செல்லும் பொழுது, விஷ்ணுவர்தன் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. இந்த சூழ்நிலையில், செய்வதறியாது திகைத்துப்போன விஷ்ணுவர்தன், அந்த இருசக்கர வாகனத்தைக் கீழே விட்டு இறங்கி தூரமாக ஓடியுள்ளார்.

இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள், இருசக்கர வாகனத்தில் பற்றி எரிந்த தீயைத் தண்ணீர் பீச்சி அணைத்தனர். இதன் காரணமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து, திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடும் வெயிலின் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.