ETV Bharat / state

வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் கூட வாக்களிக்கலாம்! எப்படி தெரியுமா? - Lok Sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 1:09 PM IST

Updated : Apr 18, 2024, 5:23 PM IST

Documents for voter: நாளை நடைபெறும் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல், வேறு எந்தெந்த ஆவணங்களைக்கொண்டு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அளித்துள்ள வழிகாட்டு முறைகளை பார்க்கலாம்..

Etv Bharat
Etv Bharat

சென்னை: 17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து 18-வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் ஏப்.19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக நாளை (ஏப்.19) நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியிலும் 950 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். தமிழகத்தில் 6 கோடியே 23 இலட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்களும், புதுச்சேரியில் 10 இலட்சத்து 26 ஆயிரத்து 699 வாக்காளர்களும் நாளை வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்காக கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்வடைந்த நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்து வருகிறது.

Documents for voter
Documents for voter

இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வேறு எந்தெந்த ஆவணங்களைக்கொண்டு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள் அவர்களின் அடையாளத்தை மெய்பிக்க பின்வரும் மாற்று புகைப்பட்ட அடையாள ஆவணங்களில் ஒன்றை காண்பிக்க வேண்டும்.

  • ஆதார் அட்டை
  • நிரந்தர கணக்கு எண் அட்டை (Pan Card)
  • மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை
  • மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
  • புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை
  • மத்திய, மாநில அரசுகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்
  • ஓட்டுநர் உரிமம் (Driving license)
  • கடவுச்சீட்டு (Passport)
  • தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
  • ஓய்வூதிய ஆவணம்
  • நாடாளுமன்ற, சட்டமன்ற பேரவை, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கபட்டுள்ள அலுவலக அடையாள அட்டை

வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து செல்ல முடியாதவர்கள் மேற்கூறிய 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து சென்று வாக்களிக்கலாம். வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப்பை வைத்து வாக்களிக்க முடியாது.

அதே போல, 1950 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 20ஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் அசல் கடவுச்சீட்டிலுள்ள விவரங்களை அடிப்படையாகக்கொண்டு வாக்களிக்க முடியும். வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு முன்பே voters.eci.gov.in என்ற இணையதளத்தில் உங்களது பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துவிட்டு செல்லுங்கள்.

இதையும் படிங்க: "ஓட்டு போடுவதற்காவது வண்டி அனுப்புங்க".. தேர்தல் பிரச்சாரத்தையே அறியாத திருநெல்வேலி காணி பழங்குடியினர்! - LOK SABHA ELECTION 2024

Last Updated :Apr 18, 2024, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.