ETV Bharat / state

விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி காலமானார்.. திமுகவில் கடந்து வந்த பாதை! - vikravandi mla Pugazhenthi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 10:56 AM IST

Updated : Apr 6, 2024, 11:10 AM IST

mla Pugazhenthi
mla Pugazhenthi

vikravandi mla Pugazhenthi: விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி( வயது 71) உடல்நலக்குறைவால் காலமானார்.

விழுப்புரம்: விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான ந.புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 71.

1973-ஆம் ஆண்டு முதல் திமுகவில் பணியாற்றி வந்த நா.புகழேந்தி திமுகவின் கிளைக் கழகச் செயலாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட பொருளாளர் பிறகு தற்போது விழுப்புரம் மத்திய மாவட்ட கழக செயலாளராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவருக்கு மீண்டும் 2021-ஆம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியின் நெருங்கிய நண்பராகவும், தீவிர விசுவாசியாகவும் இருந்தவர் நா.புகழேந்தி. கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னையில் 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்றைய தினம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக முதலமைச்சர் கலந்து கொண்ட தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்வதற்காக வந்த போது மயக்கம் அடைந்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.

Last Updated :Apr 6, 2024, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.