ETV Bharat / state

ஐபிஎல் போட்டி எதிரொலி; சென்னையில் போக்குவரத்து மாற்றம்! - CSK Vs RCB

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 5:40 PM IST

Etv Bharat
Etv Bharat

Chennai Route change: சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை: ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டி, நாளை சென்னை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. இந்த நிலையில், மார்ச் 22 மற்றும் 26ஆம் தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை பாரதி சாலையிலிருந்து வரும் வாகனங்கள், விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்லலாம் எனவும், வாலாஜா சாலையில் இருந்து வரும் வாகனங்கள், விக்டோரியா ஹாஸ்டல் ரோட்டில் செல்ல அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெல்ஸ் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளதாகவும், வாலாஜா சாலை பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து, பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகரப் பேருந்துகள், பெல்ஸ் சாலைகளுக்குச் செல்லாமல், வாலாஜா சாலைக்கு செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதி சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள், கண்ணகி சிலை சாலை செல்வதற்கு அனுமதி இல்லை எனவும், வாலாஜா சாலையிலிருந்து வரும் வாகனங்கள், பெல்ஸ் சாலைக்கு செல்வதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விலகினார் தோனி.. சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட்! - Ms Dhoni Steps Down As Captain

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.