ETV Bharat / state

வறண்ட சுருளி அருவி.. ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப் பயணிகள்! - Suruli waterfall at Theni

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 9:19 PM IST

tourists-return-disappointed-as-suruli-waterfall-is-dry
சுருளி அருவி வறண்டு காணப்படுவதால், ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்..

Suruli waterfall at Theni: தேனி மாவட்டம், சுருளி அருவியில் நீர் வரத்து இல்லாததால் கோடை விடுமுறையைக் கொண்டாட வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

தேனி: தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. சுற்றுலாத் தலமாகவும், ஆன்மீகத் தலமாகவும் உள்ள இந்த அருவியில், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து, அருவியில் குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், தற்பொழுது கோடை காலம் நிலவி வருவதால், அருவிக்கு நீர் வரத்து வரக்கூடிய தூவானம், ஈத்தக்காடு, அரிசி பாறை பகுதிகளில் மழைப்பொழிவு இன்றி முற்றிலும் அருவிக்கு நீர்வரத்து இன்றி வெறும் பாறையாகக் காட்சியளிக்கிறது.

தற்பொழுது, கோடை காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், குடும்பத்துடன் சுருளி அருவிக்கு விடுமுறையைக் கொண்டாட ஆர்வத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகள், தண்ணீர் வரத்து இல்லாததால் அருவியில் குளிக்க முடியவில்லை என்ற பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

மேலும், சுருளி அருவியில் நீர்வரத்து வரும் தகவல் கிடைத்த உடனே சுருளி அருவிக்கு வர வேண்டும் எனவும், வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கலைந்த மலர் மாலை.. மதுரை கள்ளழகருக்கு கொண்டு செல்லப்பட்டது! - Madurai Chithirai Festival

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.