ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் - தேனி அதிமுக வேட்பாளர் கோரிக்கை! - AIADMK candidate Narayanasamy

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 5:59 PM IST

தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி
தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி

AIADMK candidate Narayanasamy: வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரிக்குள் வந்த இளைஞர் ஒரு பெண்ணை பார்க்க வந்ததாகக் கூறுவது உண்மைதானா என்று போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்றும், வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி

தேனி: வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரிக்குள் வந்த இளைஞர் ஒரு பெண்ணை பார்க்க வந்ததாகக் கூறுவது உண்மைதானா என்று போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்றும், வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு என்னும் மையமான தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியைச் சுற்றி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கல்லூரியைச் சுற்றி இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞர் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் இந்த கல்லூரியில் முன்னாள் ஊழியராக பணியாற்றி வந்தார் என்பதும், தனக்கு தெரிந்த பெண்ணை பார்க்க வந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாகத் தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி கல்லூரியில் நேரில் சென்று ஆய்வு செய்து பின் செய்தியாளர்கள் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை. கல்லூரிக்குள் வந்த இளைஞர் ஒரு பெண்ணை பார்க்க வந்ததாகக் கூறுகிறார். அவர் கூறுவது உண்மைதானா என்று போலீசார் விசாரணை செய்ய வேண்டும். வாக்குப்பதிவு மையத்திற்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மத ரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தப் பிரதமர் மோடி முயற்சி" - செல்வப் பெருந்தகை சாடல்! - TN Congress Leader Criticized PM

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.