ETV Bharat / state

தேனியில் மலைப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படக் காரணமாக இருந்த நபர் கைது! - forest fire in theni

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 9:25 PM IST

Forest Fire In Theni
குதியில் காட்டுத் தீ ஏற்பட காரணமாக இருந்த நபர் கைது

Forest Fire In Theni: தேனி மாவட்டம் குரங்கணி கொம்பு தூக்கி மலைப்பகுதியில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு வனத்துறைக்கு அருகே உள்ள தனியார் தோட்டப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரியக் காரணமாக இருந்த நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தேனி: தேனி மாவட்டம் குரங்கணி கொம்பு தூக்கி மலைப்பகுதியில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு வனத்துறைக்கு அருகே உள்ள தனியார் தோட்டப் பகுதியில் காட்டுத் தீ பற்றி பிச்சாங்கரை பகுதி வரை பரவியது.

இந்த காட்டுத்தீயை அணைக்க சென்ற வனத்துறையினர் அங்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்பொழுது அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் போடி நாயக்கனூர் புதூரில் வசித்து வரும் கண்ணன்(38) என்பவர் அப்பகுதியில் மது அருந்திவிட்டு சிகரெட் பற்ற வைப்பதற்காக லைட்டரை உபயோகப்படுத்தி அதை அணைக்காமல் அப்படியே அங்குள்ள காய்ந்த புற்களின் மீது போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியிலிருந்த கண்ணனை வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் கண்ணன் மது அருந்தி விட்டு தீ வைத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் வன பாதுகாப்பு சட்டம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணனைக் கைது செய்து உத்தம பாளையம் சிறையில் அடைத்தனர்.

இது போன்ற சமூக விரோதிகளின் செயல்பாடுகள் காரணமாகக் காட்டுத்தீ பற்றி எரிவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி கொலை வழக்கில் கைதான 8 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு! முழுவிபரம் என்ன? - 8 PERSON ARRESTED Goondas Act

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.