ETV Bharat / state

தென்காசியில் பட்டா மாறுதலுக்கு ரூ.13 ஆயிரம் லட்சம் வாங்கிய விஏஓ அதிரடி கைது! - tenkasi vao arrest

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 3:36 PM IST

Tenkasi VAO Arrest
Tenkasi VAO Arrest

Tenkasi VAO Arrest: தென்காசி சங்கரன்கோவில் அருகே பட்டா மாறுதலுக்காக 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள ஈச்சந்தா கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் விஜயகுமார். அதே பகுதியில் உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவர், தன்னுடைய இடம் பட்டா மாறுதலுக்காக கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரை நாடியுள்ளார்.

ஆனால், கிராம நிர்வாக அலுவலர், கருப்பசாமியிடம் பல்வேறு காரணங்களை சொல்லி பட்டாவை மாற்றி தராமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இரண்டு மாதங்களாக கருப்பசாமியை பட்டா மாறுதலுக்காக அலைக்கழித்த நிலையில், 13 ஆயிரம் ரூபாய் லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சலடைந்த கருப்பசாமி, மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், 3 தினங்களாக விசாரணை நடத்திய லட்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய 13 ஆயிரம் ரூபாய் பணத்தை கருப்பசாமியிடம் கொடுத்து, அதனை விஜயகுமாரிடம் வழங்க சொல்லி பின் தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த பணத்தை கருப்பசாமி விஜயகுமாரிடம் கொடுத்த போது, அதனை வாங்க முற்பட்ட விஜயகுமாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், அதிகாரிகள் விஜயகுமாரிடம் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடத்தியது தெரியவந்துள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் தென்காசி சேர்ந்தமரம் கிராம நிர்வாக அதிகாரி, பட்டா மாறுதலுக்காக ரூ.10 ஆயிரம் லட்சம் வாங்கிய நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: இருவர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்? - Rameshwaram Cafe Blast 2 Arrest

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.