ETV Bharat / state

அரசுப் பள்ளிகளில் சேராத மாணவர்கள் விவரம் கணக்கெடுப்பு.. இதுவரை எத்தனை பேர் சேர்ப்பு? - student admission 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 4:48 PM IST

Updated : Mar 28, 2024, 5:04 PM IST

பள்ளியில் சேராத மாணவர்களின் விபரம் கணக்கெடுப்பு
அரசுப் பள்ளிகளில் 27 நாளில் 2,84,443 மாணவர்கள் சேர்க்கை

Student admission in govt schools: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 27ஆம் தேதி வரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 443 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் 31 ஆயிரத்து 336 பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 6 ஆயிரத்து 29 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்து, 2024-25ஆம் கல்வியாண்டில் முன்னதாக மார்ச் 1ஆம் தேதி முதல் சேர்க்கைப் பணிகளை துவங்கியது.

அதன்படி, மார்ச் 1ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 443 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மார்ச் 31ஆம் தேதிக்குள் 3 லட்சம் மாணவர்கள் சேர்க்கை இலக்கை எட்ட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 5 வயது பூர்த்தி அடைந்த அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும். ஐந்து வயது பூர்த்தி அடைந்த குழந்தை பள்ளியில் சேர்க்காமல் விடுப்பட்டுள்ளதா? என்பதை தொண்டு நிறுவனங்கள் மூலமாக இரண்டு வாரங்களில் சர்வே எடுக்கும் பணியும் நடைபெற உள்ளது. இது குறித்து அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்டக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 6 ஆயிரத்து 29 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (smart classroom) அமைக்கும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக செய்து வருகிறது.

கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கும் திறன்மிகு வகுப்பறைகள் செயல்பாட்டில் இருக்கும். அதேபோல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு டேப் வழங்கப்பட உள்ளது.
7 ஆயிரத்து 956 அரசு நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை:

கல்வியாண்டுஅரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைஅரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைமொத்த மாணவர்கள் சேர்க்கை
2021-20222,56,637 மாணவர்கள்1,10,621 மாணவர்கள்3,67,258 மாணவர்கள்
2022-20232,21,703 மாணவர்கள்94,924 மாணவர்கள்3,16,627 மாணவர்கள்
2023-20241,88,579 மாணவர்கள்78,355 மாணவர்கள்2,66,934 மாணவர்கள்

இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை மார்ச் 1 ந் தேதியே துவக்கியதுடன், அரசின் நலத்திட்டங்களாக காலை சிற்றுண்டி, வண்ணமயமான சீருடை, காலணிகள், அரசால் வழங்கப்படும் சலுகை, உயர்கல்வி உதவித்தொகை போன்றவற்றை எடுத்துக் கூறியும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக திறன்மிகு வகுப்பறை (smart classroom) ஆங்கில மொழி ஆய்வகம், கம்ப்யூட்டர் ஆய்வகம் உள்ளிட்டவற்றை மாணவர்களின் பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மேலும், சமூக நலத்துறையால் நடத்தப்படும் அங்கன்வாடி மையங்களில் படிக்கும் 3 லட்சத்து 38 ஆயிரம் குழந்தைகளின் விரங்களும் பெறப்பட்டு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கைப் பணிகள் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கையை 5 லட்சத்திற்கு மேல் உயர்த்தவும், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் மூலமாக மாணவர்களை அரசுப்பள்ளியில் சேர்க்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அரசின் தீவிர நடவடிக்கையால் மார்ச் 1ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 443க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மார்ச் 31ஆம் தேதிக்குள் 3 லட்சம் மாணவர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெபாசிட் தொகையை தவணையில் செலுத்துவதாக கூறிய வேட்பாளர் - தேர்தல் அலுவலரின் நடவடிக்கை என்ன? - Mahendra Orang

Last Updated :Mar 28, 2024, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.