ETV Bharat / state

கன்னியாகுமரி, கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 3:54 PM IST

கன்னியாகுமரி, கோவையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
கன்னியாகுமரி, கோவையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

Southern railway: கோவை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து சென்னை செல்லும் பயணிகளின் வசதிக்காக நாளை (பிப்.04) மற்றும் நாளை மறுநாள் (பிப்.05) சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை: கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லும் பயணிகளின் வசதிக்காக, அடுத்த இரண்டு தினங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது.

கன்னியாகுமரி டூ சென்னை: கன்னியாகுமரியில் இருந்து, சென்னை எழும்பூர் (06041) என்ற அதிவிரைவு சிறப்பு ரயில், பிப்ரவரி 4ஆம் தேதி, கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணி புறப்படும். நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி வழியாக மறுநாள் காலை 09.45க்கு வந்து சேரும்.

இதே ரயில் மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து, மதியம் 1 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக மறுநாள் அதிகாலை 2 மணிக்கு சென்றடையும். மேலும், இந்த ரயில், இரண்டு 2ஆம் வகுப்பு ஏ.சி வகுப்பு, ஆறு 3ஆம் ஏ.சி வகுப்புகள், ஒரு 3-ஆம் வகுப்பு சாதரான ஏ.சி வகுப்பு, 6 பொது வகுப்பு உள்ளிட்டவை அடங்கும்.

கோவை டூ சென்னை: கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு (06043) என்ற அதிவிரைவு சிறப்பு ரயில், பிப்ரவரி 4-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு மறுநாள் காலை 8.20 மணிக்கு வந்து சேரும்.

மறு மார்க்கத்தில், சென்னையில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு வழியாக கோவைக்கு அதேநாள் இரவு 8.25-க்கு செல்லும். இந்த ரயிலில், இரண்டு 2ஆம் ஏ.சி வகுப்புகள், ஏழு 3-ஆம் வகுப்பு ஏசி வகுப்புகள், ஆறு பொது வகுப்புகள் மற்றும் நான்கு 2-ஆம் வகுப்பு பொது வகுப்புகள் உள்ளிட்டவை அடங்கும். மேலும் தற்பொது, இந்த ரயிலுக்கான சிறப்பு முன்பதிவு தொடங்கி விட்டதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஐஐடி வரலாற்றில் முதல்முறையாக ஸ்போர்ட்ஸ் கோட்டாவை அறிமுகப்படுத்தும் சென்னை ஐஐடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.