ETV Bharat / state

தேர்தல் மண்டல அலுவலர்கள் கார்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தம்: நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்! - Lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 4:42 PM IST

நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
தேர்தல் மண்டல அலுவலர்கள் கார்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தம்

GPS installed in Zone Officer car: சேலம் மண்டல அலுவலர்களுக்கான வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி நடைபெற்றுவருவதை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம்: தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று (ஏப்.16) நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்விற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, வருகின்ற ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,260 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், சேலம் மாவட்டத்தில் 334 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, மண்டல அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மைய நிலை அலுவலர்களுக்கு ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாகப் பயிற்சி அளித்துள்ளனர்.

வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளான ஏப்.18 அன்று வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பு அறையிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்வது முதல், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் முறையாகத் தேர்தல் நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுற்றவுடன் வாக்குப்பதிவு இயந்திரத்தினை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் சென்று ஒப்படைப்பது வரை அனைத்து பணிகளையும் கண்காணித்திட மண்டல அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மண்டல அலுவலர்கள் தேர்தல் பணிக்காகப் பயன்படுத்திட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்திலும் ஜிபிஎஸ் கருவி இன்றைய தினம் பொருத்தப்பட்டுச் சரிபார்க்கப்பட்டுள்ளது. இவ்வாகனங்களின் இயக்கங்கள் அனைத்தும் சேலம் மாவட்ட ஆட்சிய ரகத்தில் அமையப்பெற்றுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன”, என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வீடு வீடாக சென்று ஓட்டுக் பணம் கொடுத்த திமுகவினர்.. லாவகமாக பிடித்த பாஜகவினர்.. கோவையில் நடந்தது என்ன? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.