ETV Bharat / state

திடீரென கேட்ட பலத்த சத்தம்.. திகைத்த திருவாரூர் மக்கள் - என்ன நடந்தது? - Loud noise in Tiruvarur area

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 9:39 PM IST

அச்சத்தில் பொதுமக்கள்
திருவாரூர் சுற்றுவட்டார பகுதியில் திடீரென ஏற்பட்ட பலத்த சத்தம்

Loud noise heard at Tiruvarur: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட திருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று திடீரென ஏற்பட்ட பலத்த சத்தத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி போன்றவை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடங்கள் இருக்கும் பகுதியில், இன்று திடீரென பயங்கர வெடி சத்தம் ஒன்று கேட்டுள்ளது.

இந்த பயங்கர ஒலியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரிந்த அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவசர அவசரமாக கட்டிடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நில அதிர்வு காரணமாக ஏற்பட்ட சத்தமா அல்லது விமானம் ஏதும் விபத்துக்குள்ளானதா என பல்வேறு கோணங்களில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஒலியானது திருவாரூர், விளமல், சேந்தமங்கலம், கங்களாஞ்சேரி, வண்டாம்பாலை, அடியக்கமங்கலம், ஆண்டிபந்தல், கூத்தாநல்லூர் உள்ளிட்ட திருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பயங்கர ஒலியால், கட்டிடங்களில் லேசான அதிர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தி, காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இந்நிலையில், இதுவரை இந்த பயங்கர சத்தம் எதனால் ஏற்பட்டது என தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஒலி கேட்பதற்கு முன்பாக, ஜெட் விமானம் சென்றதாக பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது.

பொதுவாக ஜெட் விமானம் தாழ்வாக கீழிறங்கி மேல் நோக்கிச் செல்லும் போது, எரிபொருளின் அழுத்தம் அதிகரிக்கும், இதன் காரணமாக சத்தம் வரும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும், இந்த நிகழ்வு நீர் நிலைகளின் அருகில் தான் நிகழ்த்தப்படும் என்பதால், அதிர்வுகள் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது ஜெட் விமானத்தின் காரணமாக சத்தம் வந்ததாக அப்பகுதி மக்கள் பலரும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "நானாவது கல்லை காட்டுகிறேன், நீங்கள் பல்லை காட்டுகிறீர்கள்.." - ஈபிஎஸ்-க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி! - Udhayanidhi About EPS

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.