ETV Bharat / state

பொள்ளாச்சி வேட்பாளராக புதிய முகம்: சிட்டிங் எம்.பி.க்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 4:28 PM IST

மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி
பொள்ளாச்சி வேட்பாளராக புதிய முகம் அறிமுகம்

Pollachi DMK candidate: பொள்ளாச்சி நாடாளுமன்ற வேட்பாளராக எம்பி சண்முகசுந்தரத்திற்கு பதில், புதிய முகம் ஈஸ்வரசாமி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி நாடாளுமன்ற வேட்பாளராக, உடுமலைப்பேட்டை அருகே உள்ள மைவாடி ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கு வரவேற்பு கிடைக்குமா? என்பதைப் பார்க்கலாம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வெளியிட்டதையடுத்து, திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்.20) அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அந்த வகையில் திமுக சார்பில் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளராக, உடுமலைப்பேட்டை அருகே உள்ள மைவாடி ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டு பொள்ளாச்சி தொகுதியில் சண்முக சுந்தரம் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சண்முக சுந்தரம் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட செல்போன் உதிரிபாக நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்தார்.

மேலும் கட்சி நிர்வாகிகள், அடிமட்ட தொண்டர்கள் என யாரும் அணுக முடியாத எம்.பியாக சண்முகசுந்தரம் இருந்ததும், அவருக்கு எதிரான ரிப்போர்ட் தலைமைக்கு வழங்கப்பட காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. இளநீருக்கு பெயர் போன பொள்ளாச்சி தொகுதியில், தென்னை நார் ஏற்றுமதி, கொப்பரைக்கான விலை நிர்ணயம் போன்ற வாக்குறுதிகளில் அவர் ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது பொள்ளாச்சி பகுதி வேட்பாளராக எம்பி சண்முகசுந்தரத்திற்கு பதில், புதிய முகமான ஈஸ்வரசுவாமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஊராட்சிமன்றத் தலைவராக உள்ளூர் மக்களுடன் நல்ல இணக்கத்தில் இருப்பதால் ஆதரவு பெருகும் என திமுகவினர் நம்புகின்றனர்.

இதையும் படிங்க: 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக.. யார் யார் எந்தெந்த தொகுதியில் போட்டி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.