ETV Bharat / state

"நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது எனக்கு உறுதுணையாக இருப்போம் என நினைத்து இருப்பார்" - சீமான்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 10:54 PM IST

seeman
சீமான்

Seeman Byte: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். பின் பேசிய அவர், விஜய் அரசியல் கட்சி துவங்குவது ஆரோக்கியமாக இருக்கும். அண்ணன் மட்டும் தான் தமிழகத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார், அவருக்கு உறுதுணையாக இருப்போம் என விஜய் நினைக்கலாம்" என தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி: நாம் தமிழர் கட்சியின் சார்பாக நெல்லை, தென்காசி ஆகிய இரண்டு மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

அதன்படி, நெல்லை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா.சத்யா போட்டியிட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக மரிய ஜெனிபர் என்பவர் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதன் பின்னர் சீமான் பேசுகையில், “காவேரி நதிநீர், கச்சத்தீவு, மீத்தேன் உள்ளிட்ட எதைப் பற்றியும் பாஜகவுக்குக் கவலை இல்லை. மன்னை கொள்ளை அடிப்பது திராவிடம் அதைத் தடுக்காமல் இருக்கிறது பாஜக. இந்தியப் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது மோடியை எதிர்ப்பதும் ஆளும் கட்சியானதுடன் அவரை வரவேற்பது தான் திமுகவின் கொள்கை.

தற்போது, கேலோ விளையாட்டுப் போட்டிக்குக் கூட தமிழில் பெயர் வைக்க முடியாமல் தான் திமுக உள்ளது. மோடி இதுவரை எந்த மாநில விளையாட்டுத் துறை அமைச்சரைச் சந்தித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் உள்ள விளையாட்டுத் துறை அமைச்சரை மட்டும் சந்தித்துள்ளார். இதில், இருவருக்கும் இடையே ஒரு நல்ல உறவு என்பது இருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது என்றார்.

இதையடுத்து, விஜய் அரசியல் கட்சி துவங்குவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "விஜய் அரசியல் கட்சி துவங்குவது ஆரோக்கியமாக இருக்கும். அண்ணன் மட்டும் தான் தமிழகத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார், அவருக்கு உறுதுணையாக இருப்போம் என விஜய் நினைக்கலாம்" என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட எந்த தீய திட்டத்திற்கும் நேரடியாகச் சென்று பார்த்தால் அதில், கருணாநிதி பெயர் இருக்கும். அநாகரிக அரசியலின் ஆரம்பப் புள்ளியே திமுக தான். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 50 லட்சம் கையெழுத்தை மாநாட்டில் கண்காட்சியாக வைத்துள்ளார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த கையெழுத்தை ஜனாதிபதியிடமோ அல்லது பிரதமரிடம் கொடுத்திருக்கலாம். ஆனால், வழங்கப்படவில்லை. விளையாட்டுத் துறை நிகழ்ச்சிக்கு அழைக்கும் போது கூட அவரிடம் வழங்கி இருக்கலாம். அப்போதும் வழங்கப்படவில்லை.

நீட் தேர்வுக்கு ஒரு முடிவு சொல்லுங்கள் என்று ஏன்? பாரத பிரதமரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் கேட்கவில்லை. பொழுது போக்குக்காக திமுக கையெழுத்து வாங்கி வைத்துள்ளார்கள். மாநாட்டில் காண்பிப்பது மட்டும் தான் அவர்கள் வேலையாகும்.

நீட் தேர்வுக்கு விலக்கு வழங்கப்பட மாட்டாது என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். அது ஏமாற்று வேலையாகும். இந்த மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வேலையாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப்படவில்லை, சட்டமன்ற தேர்தலில் மட்டும் தான் நான் போட்டியிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இதையும் படிங்க: "என் அப்பா சங்கி இல்லை" - லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.